தமிழக Post Office ல் ஆயுள் காப்பீட்டு முகவர் காலிப்பணியிடங்கள் – ஆகஸ்ட் 18 நேர்காணல்!

0
தமிழக Post Office ல் ஆயுள் காப்பீட்டு முகவர் காலிப்பணியிடங்கள் - ஆகஸ்ட் 18 நேர்காணல்!
தமிழக Post Office ல் ஆயுள் காப்பீட்டு முகவர் காலிப்பணியிடங்கள் - ஆகஸ்ட் 18 நேர்காணல்!
தமிழக Post Office ல் ஆயுள் காப்பீட்டு முகவர் காலிப்பணியிடங்கள் – ஆகஸ்ட் 18 நேர்காணல்!

சென்னை மத்திய கோட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு புதிய நேரடி முகவர் தேர்வுக்கு நேர்காணல், வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெற இருப்பதாக சென்னை மத்திய கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நேர்காணல் அறிவிப்பு:

தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள அஞ்சல் அலுவலங்களில் அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்களை விற்பனை செய்ய நேரடி முகவர்கள் நியமிக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி சென்னை மத்திய கோட்ட அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறுகிறது. இதுகுறித்து, சென்னை மத்திய கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், திவ்யா சந்திரன் செய்திக். குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Exams Daily Mobile App Download

அதில் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்த இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் எண் 2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600017 இல் (பாண்டி பஜார் அருகில்) உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில் 17.08.2022 அன்று 10.00 மணிக்கு நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான தகுதிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேவையான தகுதிகள்:

கல்வி தகுதி: நேரடி முகவர் பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்த பணிக்கு 18லிருந்து 50 வரை இருக்க வேண்டும்

பிரிவுகள்: சுய தொழில் செய்யும் / வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.

மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்திய ரிசர்வ் வங்கி – அச்சத்தில் பொதுமக்கள்

தகுதிகள்: ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினிப் பயிற்சி உள்ளவர்கள் / சொந்தப்பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை.

மேற்கண்ட தகுதியுடையவர்கள் மூன்று புகைப்படத்துடன் (பாஸ்போர்ட் அளவு), அசல் மற்றும் இரண்டு நகல் -வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்றுடன் நேரில் வர வேண்டும். அதன் பின் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் 5000 ரூபாய்க்கு தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும். இந்த நேர்காணல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை முகவர்கள் மூலம் விற்பனை செய்வதற்காக மட்டுமே நடத்தப்படுகிறது. அதனால் முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பிடிக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை/கமிஷன் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!