LIC பாலிசிதாரர்களுக்கு புது வசதி அறிமுகம் – வாட்ஸ் அப் மூலம் சேவைகள்!

0
LIC பாலிசிதாரர்களுக்கு புது வசதி அறிமுகம் - வாட்ஸ் அப் மூலம் சேவைகள்!
LIC பாலிசிதாரர்களுக்கு புது வசதி அறிமுகம் - வாட்ஸ் அப் மூலம் சேவைகள்!
LIC பாலிசிதாரர்களுக்கு புது வசதி அறிமுகம் – வாட்ஸ் அப் மூலம் சேவைகள்!

இந்தியாவின் சிறந்த காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி தனது லட்சக்கணக்கான பாலிசிதாரர்களுக்கு வாட்ஸ் அப் மூலமாக சேவைகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இந்த சேவை யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறது என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

புதிய வசதி:

இந்தியாவின் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி ஏகப்பட்ட வாடிக்கையாளர்களை தன் வசம் வைத்துள்ளது. இந்த நிறுவனம் தற்போது வாட்ஸ் அப் மூலமாக சேவைகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் எல்ஐசியின் ஆன்லைன் போர்ட்டலில் பாலிசிகளைப் பதிவு செய்த பாலிசிதாரர்கள் வாட்ஸ் அப் மூலம் சேவைகளை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வசதி மூலமாக பாலிசிதாரர்கள் பிரீமியம் விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை பெறலாம்.

இந்த வசதியை பெற பாலிசிதாரர்கள் www.licindia.in என்கிற எல்ஐசி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று பாலிசிதாரர்கள் தங்கள் பாலிசிகளை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். அதன் பின் எல்ஐசி வாட்ஸ் அப் சேவைகளை பாலிசிதாரர்கள் செய்யலாம்.

வழிமுறைகள்:
  • முதலில் எல்ஐசியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப் எண்ணான 8976862090-ஐ உங்கள் மொபைலில் சேமிக்க வேண்டும்.
  • அதன் பின் வாட்ஸ் அப்பைத் திறந்து, பின்னர் எல்ஐசி ஆஃப் இந்தியா வாட்ஸ்அப் சாட் பாக்ஸைத் தேடித் திறக்க வேண்டும்.
  • பின் சாட் பாக்சில் ‘ஹாய்’ என்று மெசேஜ் அனுப்ப வேண்டும்.
  • அதன் பின் உங்களுக்கு இப்போது 11 ஆப்ஷன்கள் வழங்கப்படும்.
  • பின் உங்களுக்கு எந்த சேவை தேவையோ அதற்கான எண்ணை தேர்வு செய்ய வேண்டும்.
  • பின் எல்ஐசி உங்களுக்கு தேவையான விவரங்கள் அனைத்தையும் வாட்ஸ் அப் மூலம் அனுப்பவும்.

அட்டகாசமான வசதிகளுடன் கூடிய…அரசு பள்ளிகள் பிப்.1 முதல் திறப்பு – அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!

Follow our Instagram for more Latest Updates

பதிவு செய்யும் முறை:
  • எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.licindia.in-க்கு செல்ல வேண்டும்.
  • அதில் “வாடிக்கையாளர் போர்டல்” ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • மேலும் நீங்கள் புதிய பயனராக இருந்தால், “புதிய பயனர்” என்பதைக் கிளிக் செய்து தேவையான அனைத்து விவரங்களை கொடுக்க வேண்டும்
  • உங்களுக்கு தேவையான பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை தேர்ந்தெடுத்து உங்கள் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • பின் நீங்கள் கொடுத்த பயனர் ஐடியைப் பயன்படுத்தி ஆன்லைன் போர்ட்டலை திறக்க வேண்டும்
  • அதன் பின் “அடிப்படை சேவைகள்” என்பதன் கீழ் “கொள்கையைச் சேர்” என்பதைக் கிளிக் செய்யவும்
  • இப்போது நீங்கள் உங்களின் அனைத்து விவரங்களையும் சேர்க்க வேண்டும்.
Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!