LIC பாலிசிதாரர்கள் கவனத்திற்கு – அசத்தலான பிளான்கள் மீண்டும் அறிமுகம்!!! முழு விபரம் உள்ளே!!

0
LIC பாலிசிதாரர்கள் கவனத்திற்கு - அசத்தலான பிளான்கள் மீண்டும் அறிமுகம்!!! முழு விபரம் உள்ளே!!
LIC பாலிசிதாரர்கள் கவனத்திற்கு - அசத்தலான பிளான்கள் மீண்டும் அறிமுகம்!!! முழு விபரம் உள்ளே!!
LIC பாலிசிதாரர்கள் கவனத்திற்கு – அசத்தலான பிளான்கள் மீண்டும் அறிமுகம்!!! முழு விபரம் உள்ளே!!

LIC நிறுவனத்தில் லாபம் தரும் பல வகையான காப்பீட்டு திட்டங்கள் உள்ளன. இதில் Tech Term, Jeevan Amar ஆகிய 2 ஆயுள் காப்பீட்டு திட்டங்களை ரத்து செய்த நிலையில் தற்போது மீண்டும் இத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

காப்பீட்டு திட்டங்கள்

இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனங்களுள் ஒன்றான LIC நிறுவனத்தில் Tech Term, Jeevan Amar ஆகிய இரு விதமான ஆயுள் காப்பீட்டு திட்டங்களை மீண்டும் அறிமுகப்படுத்தி உள்ளதாக இந்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தில் கிடைக்கும் பலன்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இதில் முதலில் Tech Term திட்டத்தில் கிடைக்கும் பலன்கள் பற்றி பார்ப்போம்.

Exams Daily Mobile App Download

இத்திட்டம் பங்குச் சந்தையுடன் இணைக்கப்படாததால் பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்கள் இத்திட்டத்தை பாதிக்காது. மேலும் இத்திட்டத்தில் இருப்பவர்கள் பாலிசி காலம் முடிவடைவதற்குள் இறந்து விட்டால் பணப் பாதுகாப்பு கிடைக்கிறது. இதையடுத்து இதில் ஒரே பிரீமியம், ரெகுலர் பிரீமியம், லிமிடெட் பிரீமியம் என 3 வகைகளில் நீங்கள் பிரீமியம் தொகையை செலுத்தலாம். அத்துடன் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர், புகைப்பழக்கம் இல்லாதவர் என இருவருக்கும் தனித்தனியாக பிரீமியம் வகை உள்ளது.

இனி Library போய் புத்தகம் படிக்க தேவையில்லை.. தமிழக அரசின் ‘நூலக நண்பர்கள் திட்டம்’ – டிச. 1 தொடக்கம்!

Follow our Instagram for more Latest Updates

இதனை தொடர்ந்து ஜீவன் அமர் திட்டத்தில், பெண்களுக்கு சிறப்பு சலுகைகள் கிடைக்கிறது. அதாவது பெண்களுக்கு பிரீமியத் தொகையில் செலுத்துவதில் சில சலுகைகளும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திலும் பாலிசிதாரர் திட்டத்தின் பாலிசி காலம் முடிவடைதற்குள் இறந்துவிட்டால் பணப்பாதுகாப்பும் கிடைக்கிறது. மேலும் மேற்கண்ட இரு திட்டத்திலும் பிரீமியம் தொகையானது பாலிசிதாரரின் வயது, புகைப்பிடிக்கும் பழக்கம், பாலினம் ஆகியவற்றை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!