பெண்களின் திருமணத்திற்கு உகந்த LIC பாலிசி – ரூ.27 லட்சம் வரை பெறலாம்!

0
பெண்களின் திருமணத்திற்கு உகந்த LIC பாலிசி - ரூ.27 லட்சம் வரை பெறலாம்!
பெண்களின் திருமணத்திற்கு உகந்த LIC பாலிசி - ரூ.27 லட்சம் வரை பெறலாம்!
பெண்களின் திருமணத்திற்கு உகந்த LIC பாலிசி – ரூ.27 லட்சம் வரை பெறலாம்!

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தில் எத்தனையோ திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் தங்களது பெண்களின் திருமணத்தின் போது அதிக பணம் தேவைப்படும். அவர் எத்தகைய வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி சேமிப்பு என்ற ஒன்று இல்லையென்றால் திருமண செலவின் போது திண்டாட்டம் தான். இதனால் பெண் குழந்தைகள் ஒரு பெரிய பாரமாக பெற்றோர்களால் பார்க்கப்படுகின்றன. இதனை போக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

அதில் மிகவும் முக்கியமானது பெண்கள் பாதுகாப்பு திட்டம். அதனை தொடர்ந்து இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனம் ஒரு புதிய திட்டத்தை அமல்படுத்தியது. அந்த திட்டம்தான் எல்ஐசி கன்யாதான் பாலிசி திட்டம் (Kanyadan Policy). இந்த திட்டம் பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெற்றோருக்கு வரப்பிரசாதம் தான். இத்திட்டத்திற்கு பதிவு செய்வதற்கு பெண் குழந்தைக்கு 1 வயது முடிந்திருக்க வேண்டும், மேலும் பெற்றோருக்கு 30 வயதை கடந்திருக்க வேண்டும். ஒரு நாளைக்கு 121 ரூபாய், அதாவது மாதத்திற்கு 3600 ரூபாய் பிரீமியமாக செலுத்த வேண்டும். இது 25 வருட திட்டமாகும். ஆனால் நீங்கள் 22 வருடம் பிரீமியம் செலுத்தினால் போதுமானதாகும்.

தமிழக அரசின் தாலிக்கு தங்கம் திட்டம் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

பின்னர் இத்திட்டம் முடிவடையும் போது உங்களுக்கு 27 லட்சம் ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் முக்கியமான ஒன்று, பாலிசி எடுத்த பிறகு பாலிசிதாரர் ஒருவேளை இறந்துவிட்டால், மீதமுள்ள பிரீமியத் தொகையை குடும்பத்தினர் செலுத்த வேண்டியதில்லை. மரணம் விபத்தால் நடந்தால், குடும்பத்திற்கு மொத்தமாக ரூ.10 லட்சம் கிடைக்கும். அதே சமயம் இயற்கையாக மரணம் நிகழ்ந்தால், குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் கிடைக்கும். அதுமட்டுமின்றி, திட்டம் முதிர்ச்சியடையும் வரை குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.50,000 கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பாலிசியில் சேர்வதற்கு தேவையான ஆவணங்கள்:
  • ஆதார் அட்டை
  • வருமானச் சான்றிதழ்
  • அடையாள அட்டை
  • பிறப்புச் சான்றிதழ்
  • இருப்பிடச் சான்றிதழ்
  • பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
  • கையொப்பமிடப்பட்ட விண்ணப்பப்படிவம்
  • முதல் பிரீமியத்திற்கான காசோலை அல்லது ரொக்கம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here