ரூ.25 லட்சம் பலன்களை அள்ளித்தரும் LIC யின் சூப்பர் பிளான் – முழு விவரம் இதோ!
மாதாந்திர குறைவான பிரிமியம் கட்டணத்தின் மூலம் இறுதியில் ரூபாய் 25 லட்சம் பண பலன்களை அளிக்கும் எல்ஐசியின் ஜீவன் ஆனந்த் திட்டம் குறித்த முக்கிய தகவல்கள் அனைத்தும் இப்பதிவில் பகிரப்பட்டுள்ளது.
எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசி:
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக விளங்கிவரும் எல்ஐசி மக்களின் பாதுகாப்பு மற்றும் சேமிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இதில் குறைவான முதலீட்டில் அதிக அளவிலான லாபத்தை அளிக்கும் எல்ஐசி ஜீவன் பாலிசி திட்டம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற திட்டம் ஆகும். இதில் மாதம் தோறும் நீங்கள் செலுத்தும் பிரீமியம் தொகை இறுதியில் உங்களை லட்சாதிபதியாக மாற்றுகிறது.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த முக்கிய உத்தரவு – நீதிமன்றம் வெளியீடு!
அந்த வகையில் மாதம் தோறும் ரூபாய் 1358 பிரீமியமாக செலுத்தும் பட்சத்தில் திட்டத்தின் இறுதியில் ரூபாய் 25 லட்சத்திற்கான பலன்களை நீங்கள் அடைகிறீர்கள். திட்டத்திற்கான குறைந்தபட்ச காப்பீடு தொகை ரூபாய் ஒரு லட்சம் ஆகும். மேலும் அதிகபட்ச வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. முதிர்வு காலத்தில் தங்களின் வாழ்வை மகிழ்ச்சியாக கழிக்க விரும்பும் நபர்கள் எல்ஐசி ஜீவன் பாலிசி திட்டத்தில் இணைந்து தங்கள் எதிர்காலத்திற்காக சேமித்து அதிக அளவில் பயன்களை பெறலாம்.