LGBTQIA திருமணத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரம் – தமிழக அரசுக்கு பரிந்துரை!
தமிழகத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அது குறித்து அரசுக்கு முக்கிய உத்தரவு வெளியிட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு
இந்தியாவில் ஓரின சேர்க்கை திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என கடந்த மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் உள்ளிட்ட LGBTQIA+ தம்பதிகளின் உரிமையை அங்கரிக்கவும், சமூகத்தில் அவர்கள் கண்ணியமாக நடத்தப்படவும் வழிவகை செய்யும் வகையில் அரசுக்கு முக்கிய அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அலர்ட்.. வங்கிகள் 6 நாட்களுக்கு மூடப்படும்.. காரணம் இது தான்!
அதாவது அவர்களின் குடும்ப வாழ்க்கைக்கு அங்கீகாரமாக ‘குடும்ப வாழ்க்கைக்கான பத்திரம்’ என்ற சட்டபூர்வ அங்கீகாரத்தை அவர்களுக்கு வழங்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உறவினர்களிடம் இருந்து பாதுகாப்பு கோரி, தன்பாலின ஈர்ப்பு தம்பதி தாக்கல் செய்த மனுவில் இந்த கோரிக்கையை வைத்திருந்தனர். அதனை தொடர்ந்து LGBTQIA + பிரிவினருக்கான கொள்கையை தமிழ்நாடு அரசு வகுத்துவரும் நிலையில், இந்த பரிந்துரையை கவனத்தில் கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.