தமிழக அரசு ஊழியர்களுக்கு சரண் விடுப்பு, கருணை அடிப்படை பணி – வலுக்கும் கோரிக்கை!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு சரண் விடுப்பு, கருணை அடிப்படை பணி - வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு சரண் விடுப்பு, கருணை அடிப்படை பணி - வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு சரண் விடுப்பு, கருணை அடிப்படை பணி – வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் திமுக அரசை எதிர்த்து அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இதனால் அரசுக்கு பல பிரச்சனைகள் வரும் என்றும் கோட்டை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்:

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்று அதிகமாக இருந்த காரணத்தால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு மிகவும் கட்டுப்பாடான நிலையில் இருந்தது. மேலும் இந்த ஊரடங்கின் காரணமாக அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனாலும் மாணவர்களின் படிப்புக்கு கேடு வந்து விடக் கூடாது என்று இணையதளம் மூலம் ஆன்லைனில் பாடங்களை நடத்தி வந்தது. இவ்வாறு சென்று கொண்டிருந்த நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று சற்று குறைய ஆரம்பித்ததால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப் பட்டது. இந்த நிலையில் சென்ற வருடம் பொதுத் தேர்வுகள் நடைபெறாத காரணத்தால் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று கூறி அதன் தேதியையும் அறிவித்து உள்ளது.

TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!

இந்த நிலையில் தற்போது தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை ஆகிய இடங்களில் தி மு க அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வந்தது. மேலும் அந்தந்த ஊர்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களை அங்கு இருக்கும் வட்ட தலைவர் மற்றும் அரசு ஊழியர்கள் தலைமை தாங்கினார். மேலும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் வைத்த கோரிக்கைகளை கீழே இந்த தொகுப்பில் பார்ப்போம்.

ExamsDaily Mobile App Download

அரசு ஊழியர்கள் வைத்த கோரிக்கையாக, சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும், இரண்டு ஆண்டுகளாக முடக்கப்பட்ட சரண் விடுப்பு, காலம் குறிப்பிடாமல் தடை செய்ததை திரும்ப பெற வேண்டும். சாலைப்பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்றும், அதனை தொடர்ந்து, கொரோனா காலத்தில் இறந்த, அரசு ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு நிபந்னை இன்றி, கருணை அடிப்படை பணி நியமனம் வழங்க வேண்டும் என்றும் பல கோரிக்கைகளை அரசுக்கு வைத்து உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!