இனி எளிதாக தமிழ் கற்கலாம் – தமிழக அரசின் புதிய செயலி அறிமுகம்!
தாய்மொழியான தமிழ் மொழியை சுலபமாக கற்றுக் கொள்வதற்காக பாட நூல்களையும் பன்மொழி அகராதிகளையும் உள்ளடக்கிய ஒரு குறுஞ்செயலி உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ் வளர்ச்சி துறை தெரிவித்துள்ளது.
தமிழ் வளர்ச்சி:
மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியான நம் தாய்மொழியான தமிழ் மொழியானது தொன்மையையும் சிறப்பையும் கொண்ட சிறந்த மொழியாகும். “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்ˮ என்று பாரதியார் தமிழ் மொழியை சிறப்பித்துள்ளார். இவ்வாறு அனைத்து பெருமைகளையும் கொண்டுள்ள மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழ் வழியில் பயின்று கல்லூரிக்கு சேரும் மாணவர்களுக்கு படிப்பு காலம் வரை மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அமல்? நிர்வாகம் ஆலோசனை!
அதனை தொடர்ந்து தற்போது தமிழக அரசு பணிகளில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் TNPSC தேர்வுகளில் தமிழ் மொழித் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. 100 மதிப்பெண்களுக்கு தமிழில் இருந்து வினாக்கள் இடம்பெறும் இதில் 40% பெறுவது அவசியமாகும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் திருக் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
TN TRB தமிழக அரசு பள்ளிகளில் 9,000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
இந்த நிலையில் தமிழ் மொழியை சுலபமாக கற்றுக் கொள்வதற்காக பன்மொழி அகராதிகளையும் உள்ளடக்கிய ஒரு குறுஞ்செயலி ஒன்று உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ் வளர்ச்சி துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ் சொற்கள் குறித்த சந்தேகம் இருப்பவர்கள் 14469 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு, சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தமிழ் வளர்ச்சி கொள்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.