IPL 2021 அப்டேட்ஸ் – முன்னணி வெளிநாட்டு வீரர்கள் விலகல்! அணிகளுக்கு சிக்கல்!

0
IPL 2021 அப்டேட்ஸ் - முன்னணி வெளிநாட்டு வீரர்கள் விலகல்! அணிகளுக்கு சிக்கல்!
IPL 2021 அப்டேட்ஸ் - முன்னணி வெளிநாட்டு வீரர்கள் விலகல்! அணிகளுக்கு சிக்கல்!
IPL 2021 அப்டேட்ஸ் – முன்னணி வெளிநாட்டு வீரர்கள் விலகல்! அணிகளுக்கு சிக்கல்!

இந்த ஆண்டுக்கான 14 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு எமீரகத்தில் வைத்து நடைபெற உள்ள நிலையில், மீதமுள்ள போட்டிகளில் விலகியுள்ள சில முக்கிய வீரர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

IPL போட்டிகள்

ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடத்தப்பட்டு வரும் IPL கிரிக்கெட் போட்டிகள் இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் துவங்கியது. வழக்கம் போல 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வந்த இந்த போட்டியில் ஏறத்தாழ பாதியளவு ஆட்டங்கள் முடிவுற்ற நிலையில், இந்தியாவில் தீவிரமடைந்து வந்த கொரோனா பேரலையால் போட்டியை பாதியிலேயே நிறுத்தக்கூடிய சூழல் உருவானது. இதையடுத்து மீதமுள்ள ஆட்டங்களை ஐக்கிய அரபு எமீரகத்தில் வைத்து நடத்த திட்டமிட்ட இந்திய கிரிக்கெட் வாரியம், அதற்கான போட்டி அட்டவணைகளை சமீபத்தில் வெளியிட்டது.

ENG vs IND 3வது டெஸ்ட் – 100வது விக்கெட்டை வீழ்த்துவாரா பும்ராஹ்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

அந்த வகையில் வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 15 வரை நடைபெற உள்ள போட்டிகளுக்கான பயிற்சிகளை CSK, மும்பை அணிகளை சார்ந்த வீரர்கள் ஏற்கனவே துவங்கியுள்ளனர். இந்நிலையில் IPL போட்டிகளில் கலந்து கொண்டு வந்த சில முன்னணி வெளிநாட்டு வீரர்கள் தொடரை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளனர். அதன் கீழ் T 20 உலக கோப்பை தொடர், காயம் உள்ளிட்ட காரணங்களுக்காக IPL போட்டிகளில் இருந்து விலகியதாக சிலரது தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதன் படி தொடரில் இருந்து விலகியுள்ள வீரர்களின் பட்டியலில், கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர், பெங்களூரு அணியின் ஆடம் சாம்பா, டேனியல் சாம்ஸ், ஃபின் ஆலன் மற்றும் கேன் ரிச்சர்ட்சன், பஞ்சாப் அணியின் மெரிடித் மற்றும் ஜே ரிச்சர்ட்சன் ஆகியோர் இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தங்களது அணிகளின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை சேர்க்கும் பணியில் சம்பந்தப்பட்ட அணிகள் ஈடுபட்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

இதில் முக்கிய நட்சத்திர வீரர்கள் அதிகம் பேரை இழந்துள்ள பெங்களூரு அணி, தனது வெற்றி வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை நடைபெற்ற IPL போட்டிகளின் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்திருக்கும் டெல்லி மற்றும் சென்னை அணிகள் கோப்பையை வெல்வதற்கான முனைப்புடன் காணப்படுகிறது. அடுத்த இரு இடங்களில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் தங்களது நிலையை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!