முன்னணி நிறுவனங்களின் ரூ.1,000 கீழ் உள்ள பிராட்பேண்ட் பிளான்கள் – முழு விவரம் இதோ!

0
முன்னணி நிறுவனங்களின் ரூ.1,000 கீழ் உள்ள பிராட்பேண்ட் பிளான்கள் - முழு விவரம் இதோ!
முன்னணி நிறுவனங்களின் ரூ.1,000 கீழ் உள்ள பிராட்பேண்ட் பிளான்கள் - முழு விவரம் இதோ!
முன்னணி நிறுவனங்களின் ரூ.1,000 கீழ் உள்ள பிராட்பேண்ட் பிளான்கள் – முழு விவரம் இதோ!

நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் பல வகையான புதிய அம்சங்களை கொண்ட திட்டங்களை அறிமுகம் செய்து வரும் வகையில், ரூ.1,000 கீழ் உள்ள பிராட்பேண்ட் திட்டங்கள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

பிராட்பேண்ட் திட்டங்கள்:

பிராட்பேண்ட் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களின் வெவ்வேறு வகையான இணைய தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையும் பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், பிஎஸ்என்எல், ஜியோ மற்றும் டாடா ஸ்கை ஆகிய நிறுவனங்கள் பிராட்பேண்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த பதிவில், நிறுவனங்கள் வழங்கும் சேவைகளையும், பலன்கையும் குறித்து காண்போம். அதிலும், மாதம் ரூ.1,000 க்கு குறைவான பிராட் பேண்ட் திட்டங்களை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களில் தீவிர நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

ரூ.999 ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம்:

ஜியோ நிறுவனத்தின் ரூ.999 ஃபைபர் திட்டத்தில் டேட்டா வரைமுறை ஏதும் இன்றி 150 Mbps வரை டவுன்லோட் ஸ்பீட் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. மேலும், இந்த திட்டத்தில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் மற்றும் பிற ஓடிடி தளங்களும் இலவசமாக வழங்கப்படுகிறது. இது தவிர நெட்ஃபிக்ஸ், ஜீ 5, சோனி லிவ், ஆல்ட் பாலாஜி, வூட் செலக்ட், ஈரோஸ் நவ் மற்றும் இது போன்ற 15 ஸ்ட்ரீமிங் சேவைகளை வழங்குகிறது.

ரூ.999 ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டம்:

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.999 பிராட்பேண்ட் திட்டத்தில் 200 Mbps வேகத்திலான அன்லிமிட்டட் டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் என்டர்டெயின்மென்ட் பிராட்பேண்ட் திட்டத்திற்கானது. கூடுதலாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சூப்பர் செயலிக்கு மற்றும் அமேசான் ப்ரைமிற்கு ஒரு வருட இலவச அணுகலை வழங்குகிறது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புது ஐஸ்வர்யா ரியல் அம்மாவுடன் வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்!

ரூ.999 பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டம்:

பிஎஸ்என்எல்ன் ரூ.999 பிராட்பேண்ட் திட்டத்தில் 200 Mbps ஸ்பீடை வழங்குகிறது. ஆனால் 3.3 T.B டேட்டா வரைமுறையை வழங்குகிறது. இந்த வரம்பு முடிந்த பிறகு, 2 Mbps இணைய வேகத்தில் கிடைக்கிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு இலவச பிரீமியம் மற்றும், பிராட்பேண்ட் பயனர்களுக்கு மாதம் ரூ.129-க்கு ஸ்ட்ரீமிங் வசதிகளை வழங்க YuppTV உடன் BSNL ஒப்பந்தம் செய்துள்ளது. இதனுடன் சினிமா பிளஸ் என்ற பிளான் YuppTV, Zee5, SonyLIV மற்றும் Voot உள்ளிட்ட நான்கு OTT சந்தாக்களை வழங்குகிறது.

ரூ.950 டாடா ஸ்கை பிராட்பேண்ட் திட்டம்:

டாடா ஸ்கை பிராட்பேண்ட் திட்டத்தில் ஒரு மாதத்திற்கு 100 Mbps ஸ்பீடில் இணைய வசதி வழங்குகிறது. ஆனால் இதனுடன் மற்ற எந்த கூடுதல் ஸ்ட்ரீமிங் சேவைகளையும் வழங்கவில்லை. இந்த திட்டத்தை 3 மாதங்களுக்கு கட்டணம் செலுத்தினால் ரூ.900, 6 மாதங்களுக்கு கட்டணம் செலுத்தினால் ரூ.750, வருடத்திற்கு ரூ.700 என்ற கட்டணத்தின்படி முறையே ரூ.2,700, ரூ.4,500 மற்றும் ரூ.8,400 என்ற விகிதத்தில் சலுகை விலையை பெறலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!