ஜி-7’ உச்சி மாநாட்டில் தலைவர்கள் உறுதி – மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி

0
ஜி-7’ உச்சி மாநாட்டில் தலைவர்கள் உறுதி - மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி
ஜி-7’ உச்சி மாநாட்டில் தலைவர்கள் உறுதி - மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி
ஜி-7’ உச்சி மாநாட்டில் தலைவர்கள் உறுதி – மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி

ஒரு வருடத்திற்குள் உலக மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 70 சதவீதத்தினருக்காவது கொரோனா தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் ஜி 7 மாநாட்டில் தலைவர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர்

ஜி 7 மாநாடு :

ஜி-7 உச்சி மாநாட்டில் வழக்கமாக உலக அளவில் நிலவும் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்னைகள் குறித்து அலசி ஆராயப்பட்டு, அதற்கான தீர்வு காணப்படும். இந்த ஆண்டு ஜி-7 உச்சி மாநாட்டில் ‘பில்டு பேக் பெட்டர்’ (Build Back Better) என்ற தலைப்பின் கீழ் பேரிடரிலிருந்து மீண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது. இங்கிலாந்தில் கார்ன்வாலில் உள்ள கார்பிஸ் பே கடலோர பகுதியில் கடந்த 11-ந் தேதி தொடங்கியது. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பை நாடுகள் பங்கேற்றனர். இந்த மாநாடு நேற்றுடன் முடிவு பெற்றது.

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை இல்லை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!!

இந்த மாநாட்டில் பெண் குழந்தைகள் கல்வி, எதிர்கால தொற்று நோய்கள் தடுப்பு, பசுமை வளர்ச்சிக்கு நிதி அளித்தல் ஆகியவற்றுக்கு ஆதரவாக தலைவர்கள் ஒன்றுபட்டு குரல் கொடுத்து உறுதி எடுத்தன. ஜி-7 நாடுகள் குறைந்தபட்சம் 100 கோடி தடுப்பூசிகளை வழங்க உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என போரிஸ் ஜான்சன் கூறினார். ஜி-7’ உச்சி மாநாட்டில் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கும், மத்திய வருமான நாடுகளுக்கு உதவுகிற விதத்தில் ஒரு உள்கட்டமைப்பு திட்டத்தை ஏற்படுத்த தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.

TN Job “FB  Group” Join Now

உலக மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 70 சதவீததத்தினருக்காவது தடுப்பூசி போட்டு விட வேண்டும் அதை நாம் செய்து முடிப்பதற்கு நமக்கு 100 கோடி டோஸ் தடுப்பூசி வேண்டும். இது மிகவும் முக்கியமானது தொழில்நுட்பம் மற்றும் பணத்தின் உதவி கொண்டு பருவநிலை மாற்றம் பிரச்சினையை சமாளிப்பது என தலைவர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர். தடுப்பூசி போட செய்வது குறித்த தலைவர்களின் உறுதியை உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸ் பாராட்டினார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!