
பள்ளி, விவசாயம், சுற்றுலா உள்ளிட்ட துறையினருக்கு ஜாக்பாட் அறிவிப்பு – மேகாலயா அரசின் சூப்பரான திட்டம்!!
மேகாலயா மாநிலத்தில் பள்ளிகளுக்கான பேருந்துகள் புதியதாக தொடங்கப்பட்டதை தொடர்ந்து, சுற்றுலா, விவசாய துறையினருக்கு பயன்படும் வகையில், வாகனம் வாங்குவதற்காக மானியம் வழங்குவதற்கான திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
வாகன மானியம்:
மேகாலயா மாநிலத்தில் Shared School Bus System என்ற திட்டத்தை அம்மாநில முதல்வர் கான்ராட் சங்மா தொடங்கி வைத்தார். மேலும் முதன்மை சுற்றுலா வாகனங்கள் மற்றும் விவசாய மறுமொழி வாகனத் திட்டம் ஆகியவற்றையும் தொடங்கி வைத்தார். இத்திட்டம் தொடர்பாக இவர் ட்விட்டரில் கூறியதாவது, Shared School Bus System என்ற திட்டத்தின் மூலமாக போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என தெரிவித்துள்ளார்.
அதிரடியாக வெளியான உத்தரவு.. தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு – ஊக்கத்தொகை அறிவிப்பு!
Follow our Instagram for more Latest Updates
மேலும் இத்திட்டத்தின் மூலமாக தனியார் வாகனங்களில் பயணிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கான பேருந்துகளில் பயணம் மேற்கொள்வார்கள். இதனை தொடர்ந்து, சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக சுற்றுலா தொழில்முனைவோருக்கு பேருந்துகள் வாங்குவதற்கான மானியங்கள் வழங்க ‘முதன்மை சுற்றுலா வாகனங்கள்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, விவசாயிகளின் வாகனகளுக்கான செலவை குறைக்கும் விதமாக ‘விவசாய மறுமொழி வாகனத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலமாக விவசாயிகள் தங்களின் விவசாயப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு செலவிடப்படும் தொகை குறையும் என்று கூறியுள்ளார்.