முதல் தனியார் ரயில் சேவை துவக்கம் – அதிர வைக்கும் டிக்கெட் கட்டணம்! அதிர்ச்சியில் பயணிகள்!

0
முதல் தனியார் ரயில் சேவை துவக்கம் - அதிர வைக்கும் டிக்கெட் கட்டணம்! அதிர்ச்சியில் பயணிகள்!
முதல் தனியார் ரயில் சேவை துவக்கம் - அதிர வைக்கும் டிக்கெட் கட்டணம்! அதிர்ச்சியில் பயணிகள்!
முதல் தனியார் ரயில் சேவை துவக்கம் – அதிர வைக்கும் டிக்கெட் கட்டணம்! அதிர்ச்சியில் பயணிகள்!

தமிழகத்தில் கோவையில் இருந்து சீரடிக்கு இன்று  முதல் தனியார் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் டிக்கெட் கட்டணம் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கட்டணம் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

 சீரடிக்கு தனியார் ரயில் சேவை:

இந்தியாவின் மத்திய அரசின் பாரத் கவுரவ் எனும் திட்டம் மூலம் முதல் முறையாக தனியார் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கோவையிலிருந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி வரை இந்த ரயில் செல்ல உள்ளது. ஷீரடிக்கு 5 நகரங்களில் இருந்து தனியார் ரயில்களை இயக்குவதற்காக பிரதமர் மோடியின் ‘பாரத் கௌரவ்’ என்ற திட்டத்தின் கீழ் ரயில்வே துறை அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி இன்று (14) முதல் கோவையிலிருந்து சீரடிக்கு ரயில் சேவை தொடங்க உள்ளது. இந்த ரயில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, எலகங்கா, தர்மாவரம், மந்த்ராலயம், வாடி வழியாக, சீரடி சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான பயணிகளுக்கு போர்டிங் மறுக்கப்பட்டால் ரூ.10,000 வரை இழப்பீடு – DGCA அறிவிப்பு!

கோவையில் இருந்து 14.06.22 அன்று மாலை 6 மணிக்கு புறப்பட்டு 16.06.2022 அன்று காலை 7.25க்கு சீரடி செல்லும் ரயில், மறுநாள் 17.6.2022 அன்று காலை 7.25க்கு சாய் நகர் ஷீரடியில் இருந்து புறப்பட்டு கோவைக்கு ஜூன் 18ம் தேதி 12க்கு மணிக்கு வந்து சேரும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த நிலையில் ரயில் கட்டணத்தை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோவையில் இருந்து சீரடிக்கு செல்ல 1,458 கிலோமீட்டர் தூரத்துக்கு ஸ்லீப்பர் கட்டணம் ரூ.1,280 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதே தனியார் ரயிலில் ரூ.2500 ரூபாய் நிர்ணயிக்கபட்டுள்ளது. மேலும் மூன்றடுக்கு குளிர்சாதன படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ.2,360 ஆனால் தனியார் கட்டணம் ரூ. 5000. குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ.4,820 ஆனால், தனியார் கட்டணம் ரூ.7000 அதே குளிர்சாதன முதல் வகுப்பு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ.8,190 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் கட்டணம் ரூ.10,000 வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண உயர்வு பொது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!