ஆகஸ்ட் 12ல் விண்ணில் பாயும் ஜிசாட்-1 செயற்கைக்கோள் – கவுண்ட் டவுன் தொடக்கம்!

0
ஆகஸ்ட் 12ல் விண்ணில் பாயும் ஜிசாட்-1 செயற்கைக்கோள் - கவுண்ட் டவுன் தொடக்கம்!
ஆகஸ்ட் 12ல் விண்ணில் பாயும் ஜிசாட்-1 செயற்கைக்கோள் - கவுண்ட் டவுன் தொடக்கம்!
ஆகஸ்ட் 12ல் விண்ணில் பாயும் ஜிசாட்-1 செயற்கைக்கோள் – கவுண்ட் டவுன் தொடக்கம்!

ஆகஸ்ட் 12 (நாளை) அதிகாலை 5.43 மணிக்கு விண்ணில் பாய தயாராக இருக்கும் ஜிசாட்-1 செயற்கைக்கோளுக்கான 26 மணி நேர கவுன்ட் டவுன் இன்று காலை 3.43 மணிக்கு தொடங்கி உள்ளது. இதன் மூலம் புவி அமைவுகளை தெளிவாக காண முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஜிசாட்-1 செயற்கைக்கோள்:

கொரோனா தாக்கத்தால் உலகம் முழுதும் பாதிக்கப்பட்டிருந்ததால் திட்டமிட்டபடி ராக்கெட்டுகள் அனுப்புவதில் பல சிரமங்களை சந்தித்த இஸ்ரோ பற்பல புதிய முயற்சிகளை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து பூமியின் வளம் சார்ந்த கூறுகளை அறிவதற்காக ஜிசாட்-1 செயற்கைகோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 26 மணி நேர கவுன்ட் டவுன் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அண்ணா பல்கலை பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றம் – உயர்கல்வித்துறை அமைச்சர்!

ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து ஜிசாட் 1 செயற்கைக்கோள் செலுத்தப்படுகிறது. இந்த செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி – எஃப் 10 ராக்கெட்டை சுமந்து செல்கிறது. இந்த ஜிசாட்-1 செயற்கைகோளில் அதிநவீன கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பாதுகாப்பு ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய பகுதிகளை இடைவிடாது கண்காணிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்ணன், ஐஸ்வர்யாவிற்கு வாழ்க்கை கொடுக்கும் ஜனார்த்தனன் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த கதைக்களம்!

இது குறித்து இஸ்ரோ கூறுகையில் இரவு, பகல் எந்த நேரமாக இருந்தாலும், கடும் மேக மூட்டமாக இருந்தாலும் மழைப் பொழிவின் போதும், துல்லியமான படத்தை இந்த கேமரா பதிவு செய்யும் என தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தான், சீன எல்லைப் பகுதிகளில் அந்நாட்டு படைகளின் நகர்வுகளையும் பயங்கரவாதிகளின் செயல்பாடுகளையும் எளிதில் கண்காணிக்க இந்த கேமராக்கள் பயன்படும் என்றும் கூறப்படுகிறது. 26 மணி நேர கவுன்ட் டவுன் இன்று காலை 3.43 மணிக்கு தொடங்கியாதல் நாளை அதிகாலை 5.43 மணிக்கு செயற்கைக்கோள் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!