தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு துவக்கம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு துவக்கம் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு துவக்கம் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு துவக்கம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் பி.இ., பி.டெக்., உள்ளிட்ட இளங்கலை பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு துவக்கம்:

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாக இருக்கிறது. பி.இ., பி.டெக்., உள்ளிட்ட இளங்கலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று முதல் ஆன்லைன் மூலமாக நடைபெற இருக்கிறது. பி.இ., பிடெக் உள்ளிட்ட இளங்கலை பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் உடனடியாக https://www.tneaonline.org/ என்கிற இணையதள முகவரிக்கு சென்று தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும், மாணவர்கள் எந்தவித சிரமமுமின்றி தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாகவோ அல்லது பொறியியல் மாணவர்கள் சேர்க்கை மையத்திற்கு நேரடியாக சென்றும் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு ஜூலை 19ஆம் தேதி கடைசி நாள் என்பதால் மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் அசல் சான்றிதழ்களை ஜூலை 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – தேர்ச்சி விகிதத்தில் பெரம்பலூர் முதலிடம்!

மேலும், இளங்கலை பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு சமவாய்ப்பு எண்( ரேண்டம் எண் ) ஜூலை 22ஆம் தேதிக்குள் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பித்த மாணவர்களின் அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஜூலை 20-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை சேவை மையங்களின் மூலமாக நடைபெறும் எனவும், இளங்கலை பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here