பொது மக்களுக்காக 11 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் துவக்கம் – முதல்வர் முக்கிய அறிவிப்பு!

0
பொது மக்களுக்காக 11 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் துவக்கம் - முதல்வர் முக்கிய அறிவிப்பு!
பொது மக்களுக்காக 11 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் துவக்கம் - முதல்வர் முக்கிய அறிவிப்பு!
பொது மக்களுக்காக 11 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் துவக்கம் – முதல்வர் முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களில், வாகனம் நிறுத்தும் இடத்தில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்க இந்திய ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், முதற்கட்டமாக டெல்லியில் இன்று 11 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

சார்ஜிங் நிலையங்கள்

இந்தியாவில் தான் உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே கட்டமைப்பு இருக்கிறது. இந்நிலையில் ஆண்டுக்கு சுமார் 500 கோடி மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். அதனால் ரயில்களில் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த, இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் 2030 ஆம் ஆண்டிற்குள் இந்திய ரயில் நிலையங்களில் 46 ஆயிரம் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இந்த திட்டம் ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு மலிவு விலையில் மின்சார வாகன சார்ஜிங் வசதி கொடுக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த வசதியை கொண்டு வர ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. மேலும் இதற்காக குறைந்த கட்டணம் வசூலிக்கவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும்? வானிலை மையம் தகவல்!

Exams Daily Mobile App Download

அதில் முதற்கட்டமாக டெல்லியில் அடுத்த இரண்டு மாதங்களில் 100 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான முன் ஏற்பாடாக இன்று (அக் 18) 11 மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை காரணமாக மக்கள் அதிகமாக மின்சார வாகனங்களை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!