பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மரணம் – திரைத்துறையினர் இரங்கல்!

0
பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மரணம் - திரைத்துறையினர் இரங்கல்!
பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மரணம் - திரைத்துறையினர் இரங்கல்!
பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மரணம் – திரைத்துறையினர் இரங்கல்!

இந்தியாவின் சிறந்த மற்றும் பிரபலமான பாடகியான லதா மங்கேஷ்கர் கொரோனா நோய் தொற்றின் காரணமாக மரணம் அடைந்து உள்ளார். இதனால் திரையுலகினர் அனைவரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

பாடகி லதா மங்கேஷ்கர்

இந்திய சினிமாவில் பல மிகவும் பழம்பெரும் பாடகியான லதா மங்கேஷ்கர் இன்று காலை தனது 92 வயதில் மரணம் அடைந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி கொரோனா நோய் தொற்றின் காரணமாக மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரது வயோதிகள் காரணமாக அவருக்கு தீவிரமான சிகிச்சை அளிக்கப்படவில்லை. பின்னர், அவருக்கு அதிகமான மூச்சு திணறல் ஏற்பட்டதால், தீவிர சிகிச்சையில் இருந்தார். அவருக்கு செயற்கை மூச்சு காற்று தான் வழங்கப்பட்டு வருகிறது என்று மருத்துவ நிர்வாகம் தகவல் தெரிவித்து இருந்தது.

தனது அப்பா பற்றி கேட்கும் லட்சுமி, ஸ்தம்பித்து போன பாரதி – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்த வார ட்விஸ்ட்!

இதனை அடுத்து இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் அனைவரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். லதா மங்கேஷ்கர் தனது 13 வது வயது முதல் பாடல்களை பாடி வருகிறார். கடந்த 1942ம் ஆண்டு தனது முதல் பாடலை பதிவு செய்துள்ளார்.

பிக் பாஸ்’ அல்டிமெட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட முதல் போட்டியாளர் – ரசிகர்கள் அதிர்ச்சி!

இது வரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள லதா மங்கேஷ்கர் தமிழில் ஒரு சில பாடல்களை பாடி உள்ளார். இவர் இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம பூஷன், பத்ம விபூஷண் மற்றும் தாதா சாகேப் விருதினையும் பெற்றுள்ளார். இவரது மறைவு திரைத்துறையினருக்கு பெரும் இழப்பு தான் என்று கூறினால் அது மிகையாகாது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!