SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – எச்சரிக்கை பதிவு!

0
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - எச்சரிக்கை பதிவு!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - எச்சரிக்கை பதிவு!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – எச்சரிக்கை பதிவு!

இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான வங்கி தொடர்பான சேவைகளை செய்து வருகிறது. தற்போது இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

SBI வங்கி

இந்தியாவில் பல்வேறு பொதுத்துறை வங்கிகள் செயல்பட்டு வருகின்றனர். இதில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நிறுவனம் 44 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் பல நடைமுறை மாற்றங்களை கடந்த மாதம் முதல் அமல்படுத்தியுள்ளது. அத்துடன் வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பண மோசடிகள் ஏற்படாமல் இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

PF பணத்தை ஆன்லைனில் திரும்ப பெறுவது எப்படி? எளிய வழிகாட்டுதல்கள் இதோ!

இதனை தொடர்ந்து தற்போது அனைத்து சேவைகளும் ஆன்லைன் முறையில் நடைபெறுகிறது. அதனால் ஆன்லைன் முறையில் மோசடிகள் அதிகளவில் ஏற்படுகிறது. அத்துடன் வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள அனைத்து பணத்தையும் இழக்கும் அபாயம் ஏற்படுகிறது. அதனால் வாடிக்கையாளர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிறுவனம் புது வகையான நிதி மோசடி பற்றி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது அநேக இடங்களில் QR code மூலமாக பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது.

Jio, Airtel சிம் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – தினசரி 1.5 GB டேட்டாவுடன் கூடிய ரீசார்ஜ் பிளான்கள்!

மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் மூலமாக QR code ஸ்கேன் செய்து பணப் பரிவர்த்தனை செய்கின்றனர். இதனை நேரடியாக ஸ்கேன் செய்து அனுப்புவதால் மோசடிகள் ஏற்படுவது குறைகிறது. ஆனால் வாட்ஸ் ஆப் போன்ற செயலிகளில் இருந்து இந்த QR code ஐ ஸ்கேன் செய்தால் தங்கள் வங்கிகளில் உள்ள அனைத்து பணமும் திருடப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!