விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ வில்லி ஃபரினாவை அழ வைத்த ரசிகர்கள் – என்ன நடந்தது? வைரலாகும் வீடியோ!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' வில்லி ஃபரினாவை அழ வைத்த ரசிகர்கள் - என்ன நடந்தது? வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' வில்லி ஃபரினாவை அழ வைத்த ரசிகர்கள் - என்ன நடந்தது? வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ வில்லி ஃபரினாவை அழ வைத்த ரசிகர்கள் – என்ன நடந்தது? வைரலாகும் வீடியோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் நடிகை, நடிகர்களுக்கு கிடைத்த ரீச் அளவுக்கு சமமாக வில்லியாக நடித்து வரும் வெண்பா என்ற ஃபரினா அவர்களும் பிரபலமாகினார். அதை தொடர்ந்து தற்போது அவர் காரில் உட்கார்ந்து அழுத வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா ஃபரினா:

பாரதி கண்ணம்மா சீரியலில் ஃபரினா ஆசாத் அவர்கள் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருகிறார். சீரியல் பார்க்கும் எல்லோரும் அவரை கண்டிப்பாக திட்டி தீர்த்து இருப்பார்கள். ஏனென்றால் அந்த அளவுக்கு வில்லத்தனமான ரோல் அது. அந்த ரோலை அவரை தவிர வேறு யார் நடித்து இருந்தாலும் இந்தளவுக்கு ரீச் இருந்திருக்க வாய்ப்பில்லை. பல தரப்பினர்கள் திட்டி தீர்த்தாலும் தனது ரோலை விட்டு கொடுக்காத வகையில் இன்று வரை நடித்து அனைவர் மனதிலும் ஃபரினா என்று பதிந்ததை விட வெண்பா என்றுதான் பதிந்துள்ளார்.

ஐலா பாப்பாவின் 2வது பிறந்தநாளை மிக பிரம்மாண்டமாக கொண்டாடிய ஆலியா, சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ!

இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருந்த ஃபரினா வயிற்றில் குழந்தையுடன், பிறக்க குறைந்த நாட்கள் உள்ள வரையிலும் சீரியலை விட்டு விலகாமல் நடித்து வந்தார். அதன் பிறகு குழந்தை பிறக்கவுள்ள சமயத்தில் பாரதி கண்ணம்மா கதையில் அவர் சிறைக்கு செல்வது போல காட்டப்பட்டு அவர் காட்சிகளை நிறுத்தி வைத்திருந்தனர். இவ்வாறு அவருக்கு முதல் குழந்தையாக ஆண் குழந்தை பிறந்த செய்தியை அவர் இணையத்தில் வெளியிட்ட போது, ஃபரினாவை திட்டியவர்கள் கூட வாழ்த்து மழையை குவித்தனர்.

அதை தொடர்ந்து சமீபத்தில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அபி டெய்லர் சீரியலில் ஹீரோயினுக்கு தங்கையான பவானி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஃபரினா சில தவிர்க்க முடியாத காரணத்தால் சீரியலை விட்டு விலகியிருந்தார். மேலும், இன்ஸ்டாவில் படு ஆக்டிவ் ஆக இருக்கும் ஃபரினா ‘ நான் ஓவர் ஆக்ட் லாம் பண்ணல’ என்று சொல்லி காரில் அழுவது போன்ற ஷார்ட்ஸ் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here