சஞ்சீவ் ஆலியாவின் பிரம்மாண்ட வளைகாப்பு நிகழ்ச்சி – வைரலாகும் வீடியோ! குவியும் லைக்குகள்!

0
சஞ்சீவ் ஆலியாவின் பிரம்மாண்ட வளைகாப்பு நிகழ்ச்சி - வைரலாகும் வீடியோ! குவியும் லைக்குகள்!
சஞ்சீவ் ஆலியாவின் பிரம்மாண்ட வளைகாப்பு நிகழ்ச்சி - வைரலாகும் வீடியோ! குவியும் லைக்குகள்!
சஞ்சீவ் ஆலியாவின் பிரம்மாண்ட வளைகாப்பு நிகழ்ச்சி – வைரலாகும் வீடியோ! குவியும் லைக்குகள்!

சின்னத்திரையில் பிரபலமான தம்பதியான சஞ்சீவ் ஆலியா ஜோடிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், ஆலியாவின் 9வது மாத வளைகாப்பு நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் அது குறித்த வீடியோ ஒன்றை சஞ்சீவ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

ஆலியா மானசா சஞ்சீவ் ஜோடி:

தமிழில் சினிமா ரசிகர்களுக்கு சமமாக சீரியல் பார்க்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் சீரியல் நடிகர் நடிகைகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இந்நிலையில் விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியலில் ஒன்றாக நடித்து தனக்கொரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்கள் தான் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடி. இவர்களின் நடிப்பு திறமையை தவிர்த்து தனிப்பட்ட முறையில் பலருக்கு விருப்பமான ஜோடியாக இருக்கின்றனர். இவர்களுக்கு ஐலா என்ற அழகான மகள் இருக்கிறாள்.

மீண்டும் ”பாரதி கண்ணம்மா” சீரியலில் என்ட்ரியாகும் வருண் – அனைத்து உண்மைகளும் தெரிய வருமா?

ஐலாவும் சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டாக இருக்கிறாள். இந்நிலையில் ஆலியா ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வரும் போது இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார். நிறைமாத கர்பத்திலும் அவர் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்த நிலையில் பிரசவத்திற்கு சில மாதங்களுக்கு முன் அவர் சீரியலை விட்டு விலகினார். இந்நிலையில் ஆலியாவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த அன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக ஆலியா சஞ்சீவ் மகனின் புகைப்படம் இருந்தது.

இந்நிலையில் ஆலியா சஞ்சீவ் தனது மகன் வயிற்றில் இருக்கும் போது 9வது மாத வளைகாப்பை கோலாகலமாக நடத்தினார். ஏகப்பட்ட சின்னத்திரை பிரபலங்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் முஸ்லீம் முறைப்படி அவர்களது வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் சஞ்சீவ் ஆலியா ஜோடி அழகான பச்சை நிற உடையில் இருந்தனர். அது குறித்த வீடியோ ஒன்றை சஞ்சீவ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் ஏகப்பட்ட ரசிகர்கள் லைக்குகள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here