தமிழகத்தில் அசைவ பிரியர்கள் & மது அருந்துவோருக்கு அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் அசைவ பிரியர்கள் & மது அருந்துவோருக்கு அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் அசைவ பிரியர்கள் & மது அருந்துவோருக்கு அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் அசைவ பிரியர்கள் & மது அருந்துவோருக்கு அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மது அருந்துபவர்கள், அசைவம் சாப்பிடுபவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளக் கூடாது என்கிற தவறான தகவல் பரவி வருவதால் சனிக்கிழமை தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி முகாம்கள்:

கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பின் கொரோனா தாக்கம் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டது. கொரோனா 3ம் அலை பரவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

Amazon நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – கல்வித்தகுதி, விண்ணப்ப பதிவு & முழு விபரம் இதோ!

தமிழகத்தில் ஒரே நாளில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் முகாம்களில் போடப்பட்டுள்ளன என்றும் 2வது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதாகவும் அவர் கூறினார். கடந்த 5வது மெகா தடுப்பூசி முகாம் போது 11 லட்சம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 4வது மெகா தடுப்பூசி முகாமில் 10 லட்சம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தீபாவளிக்கு பட்டாசு கடை வைக்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – அக்.27 வரை விண்ணப்ப பதிவு!

இதுவரை நடைபெற்ற மருத்துவ முகாம்களை விட கூடுதலான மருத்துவ முகாம்கள் மூலம் மெகா தடுப்பூசி முகாமில் அனைவரும் பயனடையும் விதமாக தடுப்பூசிகள் செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த முகாம் கடந்த வாரங்களைப் போல் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறாமல், வரும் சனிக்கிழமை நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். மது அருந்துபவர்களும், அசைவம் சாப்பிடுபவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ளக் கூடாது என்கிற தவறான தகவலால் பலரும் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுப்பதால் சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here