தமிழகத்தில் நவ. 01 உள்ளாட்சி தினம் – ஊரக வளர்ச்சிதுறை ஆணையர் சுற்றறிக்கை!

0
தமிழகத்தில் நவ. 01 உள்ளாட்சி தினம் - ஊரக வளர்ச்சிதுறை ஆணையர் சுற்றறிக்கை!
தமிழகத்தில் நவ. 01 உள்ளாட்சி தினம் - ஊரக வளர்ச்சிதுறை ஆணையர் சுற்றறிக்கை!
தமிழகத்தில் நவ. 01 உள்ளாட்சி தினம் – ஊரக வளர்ச்சிதுறை ஆணையர் சுற்றறிக்கை!

தமிழகத்தில் கடந்த முறை நடைபெற்ற சட்ட பேரவையின் போது முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் விதி 110ன் கீழ் உள்ளாட்சி தினம் மீண்டும் கொண்டாடப்படும் என்று அறிவித்தார். அதன்படி வரும் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்படவுள்ளது. இது குறித்து ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

உள்ளாட்சி தினம்:

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மக்களாட்சியின் ஆணி வேர் அதனால் திமுக அரசு உள்ளாட்சியை வலுப்படுத்துவதில் தனி கவனம் செலுத்தி வருகிறது என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் ஆண்டுதோறும் உள்ளாட்சி தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று கூறினார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்ட பேரவையின் போது விதி 110ன் கீழ் நவம்பர் 1ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.

Follow our Instagram for more Latest Updates

மேலும் ஒரு ஆண்டுக்கு 6 நாள் கிராமசபை கூட்டம் நடத்தப்படும் என்றும் முதல்வர் கூறினார். அதன்படி 2022ம் ஆண்டுக்கான உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் வகையில் தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலையில் உள்ளாட்சி குறித்த கண்காட்சி நடத்துதல், கலந்துரையாடல்கள் நடத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சிக்கான வழக்கு – உயர்நீதிமன்றம் தள்ளுபடி!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் ஊரக வளர்ச்சி துறை ஆணையர் தாரேஸ் உள்ளாட்சி தினம் குறித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நவம்பர் 1 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்திட வேண்டும். மேலும் ஊராட்சித் துறை அலுவலகத்தில் கண்காட்சிகள் நடத்தாலம். அதில் அரசின் திட்டங்கள் குறித்த குறும்படங்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும். அதனை தொடர்ந்து கிராம ஊராட்சி அளவில் அங்கு பணிபுரியும் தூய்மை காவலர்கள் உள்ளிட்ட ஊழியர்களை பாராட்டி பெருமைபடுத்தலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்வுகள் குறித்த விவரத்தினை இயக்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!