ஐடி ஊழியர்களே கவனம்…இதை செஞ்சா வேலைக்கு ஆப்பு தான் – வெளியான ரிப்போர்ட்!!

0
ஐடி ஊழியர்களே கவனம்...இதை செஞ்சா வேலைக்கு ஆப்பு தான் - வெளியான ரிப்போர்ட்!!
ஐடி ஊழியர்களே கவனம்...இதை செஞ்சா வேலைக்கு ஆப்பு தான் - வெளியான ரிப்போர்ட்!!
ஐடி ஊழியர்களே கவனம்…இதை செஞ்சா வேலைக்கு ஆப்பு தான் – வெளியான ரிப்போர்ட்!!

இந்தியாவில் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் தற்போது moonlighting மேற்கொள்வதால் பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றது. இந்த நிலையில் எந்தெந்த நிறுவனங்கள் moonlighting-க்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் என்பதை பற்றி பார்ப்போம்.

ஐடி ஊழியர்கள்:

இந்தியாவில் கொரோனா கால கட்டத்தில் ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறு வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டார்கள். இதையடுத்து தற்போது கொரோனா பரவல் குறைந்த பிறகு சில நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை Work From Home முறையில் பணி செய்ய தொடர்ந்து அனுமதித்து வருகின்றனர். சில நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வருகின்றனர். இந்த நிலையில் ஐடி நிறுவன ஊழியர்கள் தங்களுக்கு மற்றொரு வருமானம் கிடைக்கும் வகையில் ஒரே நேரத்தில் இரு வேறு நிறுவனத்திற்கு பணி செய்து வருகின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இதனை ஐடி நிறுவனங்கள் moonlighting என்ற பெயரில் அழைத்து வருகின்றனர். இதற்கு பல நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தும் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர். இதில் குறிப்பாக Wipro, Infosys, TCS உள்ளிட்ட முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்கள் moonlighting முறையில் பணி செய்து வந்தால் அவர்களை பணி நீக்கம் செய்கின்றனர். இதில் moonlighting-ல் ஈடுபட்டதற்காக Wipro நிறுவனமானது 300 ஊழியர்களை இதுவரை பணி நீக்கம் செய்துள்ளது.

ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக கூகுள் நிறுவனத்திற்கு ரூ. 936 கோடி அபராதம் – CCI உத்தரவு!

Exams Daily Mobile App Download

ஆனால் Tech Mahindra நிறுவனமானது moonlighting முறையை ஆதரிக்கிறது. அதாவது ஊழியர்கள் தங்களிடம் வெளிப்படையாக தெரிவித்தால் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து Financial Times அறிக்கையின்படி, இந்தியாவில் IT ஊழியர்களில் சுமார் 8 முதல் 9 சதவீதம் பேர் moonlighting-ல் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. இதே போல் Kotak Institutional Equities நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி, முழு நேரம் வேலைவாய்ப்பு ஊழியர்கள் 65% பகுதி நேர வேலை பார்ப்பவராகவும் மற்றும் moonlighting-ல் ஈடுபடுபவராகவும் இருப்பார்கள் என தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!