என்னை மன்னிச்சுரு இனியா.. இனி மயூ தான் எனக்கு உலகம் – பெத்த மகளின் தலையில் குண்டை போட்ட கோபி!

0
என்னை மன்னிச்சுரு இனியா.. இனி மயூ தான் எனக்கு உலகம் - பெத்த மகளின் தலையில் குண்டை போட்ட கோபி!
என்னை மன்னிச்சுரு இனியா.. இனி மயூ தான் எனக்கு உலகம் - பெத்த மகளின் தலையில் குண்டை போட்ட கோபி!
என்னை மன்னிச்சுரு இனியா.. இனி மயூ தான் எனக்கு உலகம் – பெத்த மகளின் தலையில் குண்டை போட்ட கோபி!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி ராதிகாவின் திருமணத்தை எப்படியாவது நிறுத்துவேன் என ராமமூர்த்தி ஈஸ்வரிக்கு சத்தியம் செய்து கொடுக்க, ஆனால் கோபி யாரை பற்றியும் எனக்கு கவலை இல்லை என்பது போல பேசுகிறார். அப்பா பாசத்தில் இருக்கும் இனியாவிற்கு இது தெரிந்து பெரிய ட்விஸ்ட் ஒன்று வர இருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியல்:

டாப் வரிசையில் இருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகாவின் திருமணம் நடக்குமா? நடக்காதா? என விறுவிறுப்புடன் கதை சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று ரிசப்ஷன் நாளை திருமணம் என அடுத்தடுத்து பரபரப்பான எபிசோட் வர இருக்கிறது. இதற்கிடையே கோபி – ராதிகா திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என ராமமூர்த்தியும் ஈஸ்வரியும் பேசிக் கொள்கின்றனர். அதனால் ராமமூர்த்தி பெரிய முடிவெடுத்து கோபியை கோவிலில் சந்தித்து பேசுகிறார்.

நீ ராதிகாவை திருமணம் செய்ய கூடாது, அதனால் எல்லாரும் பாதிக்கப்படுவார்கள், உன் பசங்களை பற்றி நினைத்து பார், இனியாவிற்கு இனிமேல் தான் வாழ்க்கை இருப்பதாக சொல்ல, ஆனால் அதை எல்லாம் கேட்காத கோபி யார் என்ன சொன்னாலும் இந்த திருமணம் நடந்தே தீரும், எனக்கும் பாக்கியாவிற்கும் எல்லாம் முடிந்துவிட்டது. இனியாவை வைத்து எமோஷனல் பிளாக்மெயில் பண்ணாதீங்க என சொல்லிவிட்டு கிளம்புகிறார். ராமமூர்த்தி கோபி சொன்னதை கேட்டு பயங்கர கோபத்துடன் வீட்டிற்கு செல்கிறார்.

அடக்கடவுளே.. இதுக்கு அப்புறம் விஜய் டிவி நிலைமை கஷ்டம் தான் – மாஸ் காட்டிய சன் டிவி சீரியல்கள்!

Exams Daily Mobile App Download

அங்கே அனைவரிடமும் கோபி ராதிகா திருமணம் பற்றி பேசி ஆதங்கப்படுகிறார். மறுபக்கம் கோபி ராமமூர்த்தி பேசியதை கேட்டு கோவமாக வீட்டிற்கு வர அங்கே மயூராவை கொஞ்சுகிறார். இனிமேல் எனக்கு மயூரா தான் உலகம் இனியாவை வைத்து பிளாக்மெயில் செய்தாலும் நான் மனம் மாற போவதில்லை என பேச, அதை ராதிகாவின் அம்மா ரெகார்ட் செய்து இனியாவிற்கு அனுப்புகிறார். ஸ்கூல் விட்டு வந்த இனியா அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறார். தன்னுடைய அப்பாவிற்காக அம்மாவை எவ்வளவு கஷ்டப்படுத்தினோம் என நினைத்து இனியா மிகவும் வருத்தப்படுகிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!