வீட்டில் இருந்தே வேலை (WFH) பார்க்கும் ஐடி ஊழியர்கள் கவனத்திற்கு – ஆய்வறிக்கையின் முக்கிய தகவல்கள்!

0
வீட்டில் இருந்தே வேலை (WFH) பார்க்கும் ஐடி ஊழியர்கள் கவனத்திற்கு - ஆய்வறிக்கையின் முக்கிய தகவல்கள்!
வீட்டில் இருந்தே வேலை (WFH) பார்க்கும் ஐடி ஊழியர்கள் கவனத்திற்கு - ஆய்வறிக்கையின் முக்கிய தகவல்கள்!
வீட்டில் இருந்தே வேலை (WFH) பார்க்கும் ஐடி ஊழியர்கள் கவனத்திற்கு – ஆய்வறிக்கையின் முக்கிய தகவல்கள்!

உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய பிறகு தனது ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து ஹைப்ரிட் மாடல் வேலை கலாச்சாரத்தையும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

ஹைபிரிட் மாடல்:

உலகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு முதல் பரவிய கொரோனா பெருந்தொற்றால் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் அதிகரித்தது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அனைத்து நாடுகளும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதனால் கடைகள் வணிக வளாகங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என அனைத்தும் மூடப்பட்டது. இந்த நிலையில் நிறுவனங்கள் தங்களது அலுவலக ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி வழங்கினர். இதனையடுத்து ஊழியர்கள் கணினி, லேப்டாப், மொபைல் போன் ஆகிய சாதனங்களை பயன்படுத்தி வீட்டிலிருந்தே பணி புரிந்து வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் நாளை (ஏப்ரல் 14) பொது விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!

அதனை தொடர்ந்து தற்போது ஹைப்ரிட் மாடல் அதாவது பாதி நபர்கள் வீட்டிலிருந்தும் மீதி நபர்கள் அலுவலகத்தில் இருந்தும் பணி புரியும் முறையையும் செயல்படுத்தி வருகின்றனர். பல முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் ஹைப்ரிட் வொர்கிங் மாடலை நடைமுறை படுத்தி உள்ளனர். இந்த நிலையில் WG செய்த ஆய்வில் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதாலும், ஹைப்ரிட் மாடல் நடைமுறைப்படுத்தி உள்ள காரணத்தால் அலுவலகத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் பல நிறுவனங்கள் பெரிய அலுவலகத்தை மூடிவிட்டு சிறிய அலுவலகத்திற்கு மாறி விட்டனர்.

80 சதவீத ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் காரணத்தால் நிறுவனங்களுக்கு அதிகப்படியான பணத்தைச் சேமிக்கிறது என்றும் ஆய்வு தகவல் தெரிவிக்கின்றது. இந்த சேமிப்பானது இந்திய ரூபாய் மதிப்பில் 8,00,570.21 ரூபாய் ஆகும். IWG ஆய்வில் 2 லட்சம் ஊழியர்கள் கொண்ட முன்னணி வங்கி ஹைப்ரிட் மாடல் மூலம் 1.6 பில்லியன் பவுண்டும்,20,000 ஊழியர்கள் கொண்ட டெக் நிறுவனம் 160 மில்லியன் பவுண்ட், 2000 ஊழியர்களை கொண்ட சேவை நிறுவனம் 16 மில்லியன் பவுண்ட் சேமிப்பதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டிலிருந்து பணியாற்றுவதால் ஊழியர்களும் போக்குவரத்து மற்றும் இதர செலவுகளை சேமிக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!