WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – மொபைல் போன் தொலைந்த பின்னும் மெசேஜ்களை எடுப்பது எப்படி?

0
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு - மொபைல் போன் தொலைந்த பின்னும் மெசேஜ்களை எடுப்பது எப்படி?
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு - மொபைல் போன் தொலைந்த பின்னும் மெசேஜ்களை எடுப்பது எப்படி?
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – மொபைல் போன் தொலைந்த பின்னும் மெசேஜ்களை எடுப்பது எப்படி?

உங்கள் செல்போன் தொலைந்தாலும் அதில் வாட்ஸ் ஆப் செய்திகளை எளிதாக மீட்டெடுக்கலாம். அதற்கான வழிமுறைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

வாட்ஸ் ஆப்:

தற்போதைய நவீன காலத்தில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களே இருக்க முடியாது. எண்ணற்ற தகவல்களை எளிதாக நாம் கையில் உள்ள ஸ்மார்ட் போன் மூலம் இருந்த இடத்தில் இருந்தே அறிகிறோம். எப்போதும் நம் கைகளில் இருக்கும் செல்போன் எதிர்பாராத விதமாக தொலைந்து போக வாய்ப்பிருக்கிறது. போன் திருட்டு சம்பவங்கள் தினந்தோறும் நடந்து வருகிறது. மேலும் சில நேரங்களில் நமக்கே தெரியாமல் நாம் வெளி இடத்தில் விட்டு விடுவோம். இந்த நேரத்தில் நம் செல்போன் சிம் கார்டை முதலில் பிளாக் செய்ய வேண்டும். இதன் மூலம் உங்கள் செல் நம்பரை வேறு யாரும் பயன்படுத்துவதை தடுக்க முடியும்.

IDBI வங்கியில் ஆண்டிற்கு ரூ.60 லட்சம் சம்பளத்தில் தேர்வின்றி வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி நாள்!

மேலும் உங்கள் வங்கி சார்ந்த தகவல்களும் பாதுகாக்கப்படும். அடுத்ததாக உங்கள் வாட்ஸ் ஆப் சாட்களையும் நீங்கள் மீட்டெடுக்கலாம். அதனால் மொபைல் தொலைந்தால் முதலில் மொபைல் நெட்ஒர்க் சென்டருக்கு சென்று சிம் கார்டை பிளாக் செய்ய வேண்டும். நீங்கள் புது ஸ்மார்ட்போன் வாங்கிய பிறகு உங்கள் வாட்ஸ்அப் என்னுடன் இணைந்த சிம் கார்டை பயன்படுத்தும் போது அதே வாட்ஸ்அப் கணக்கு தொடங்கி பேக்அப் கொடுக்கலாம்.

WhatsApp சாட்களை மீட்டெடுக்கும் வழிமுறைகள்:
  • உங்கள் புதிய ஆண்ட்ராய்டு போனில் முதலில் வாட்ஸ் அப் இன்ஸ்டால் செய்யவும்.
  • பழைய வாட்ஸ் அப்பில் இருக்கும் அதே மொபைல் நம்பரை பயன்படுத்தி வாட்ஸ்அப் அக்கவுண்ட் தொடங்கவும்.
  • அடுத்ததாக வாட்ஸ் அப் ஓப்பன் ஆனவுடன் அதில் பேக்கப் ஆப்ஷன் முன் வரும் நீங்கள் அதை தேர்ந்தெடுக்கும் போது உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ், போட்டோஸ் என அனைத்தும் மீண்டும் வந்து விடும்.
  • உங்கள் மொபைல் ஐபோனாக இருந்தால் உங்கள் புதிய ஐபோனில் வாட்ஸ் அப் ஐ பதிவிறக்கம் செய்து ஆப்பிள் ஐடியில் பாஸ்வேர்டை உள்ளீட்டு வாட்ஸ்அப் என்னை சரிபார்க்கவும்.
  • iCloud இல் இருந்து பேக்கப் திரையில் சாட் ஹிஸ்டரியை மீட்டெடுக்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here