மழையில் வழுக்கி விழுந்த பிரபல சீரியல் நடிகை – நடிப்பா? உண்மையா? குழப்பத்தில் ரசிகர்கள்!

0
மழையில் வழுக்கி விழுந்த பிரபல சீரியல் நடிகை - நடிப்பா? உண்மையா? குழப்பத்தில் ரசிகர்கள்!
மழையில் வழுக்கி விழுந்த பிரபல சீரியல் நடிகை - நடிப்பா? உண்மையா? குழப்பத்தில் ரசிகர்கள்!
மழையில் வழுக்கி விழுந்த பிரபல சீரியல் நடிகை – நடிப்பா? உண்மையா? குழப்பத்தில் ரசிகர்கள்!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதுப்புது சீரியல்கள் வந்த வண்ணமாகத்தான் உள்ளது. அவ்வரிசையில் விஜய் டிவி சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகை ரட்சித்தா தற்போது நடித்து வரும் புதிய சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டில் வழுக்கி விழுந்துள்ளார். அதனால் காலில் அடிபட்டுள்ளதா என்பதை பார்க்கும் காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ரட்சிதா:

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கணவனை இழந்த ஒரு பெண் அவளது குழந்தைகளுடன் எப்படி சமூகத்தில் வாழ்கிறார்? அவர் சந்திக்கும் இன்னல்கள் என்னென்ன? என்பதை கதைக்களமாக கொண்டு ‘இது சொல்ல மறந்த கதை’ என்ற பெயரில் புது சீரியல் ஒன்று ஒளிபரப்பாகி வருகிறது. இதில் விஜய் தொலைக்காட்சியில் இருந்து விலகிய பிரபல நடிகை ரட்சிதா முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் குறித்த ப்ரோமோ வெளியான ஆரம்ப நாட்களில் இருந்தே அதிக அளவு பெண்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்ததை அடுத்து ஃபேவரைட் சீரியலில் ஒன்றாக மாறியுள்ளது.

விஜய் டிவி சீரியல் நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில் இது சொல்ல மறந்த கதை சீரியலின் ஷூட்டிங்கில் ரட்சிதா மழையில் வழுக்கி கீழே விழுவதை காட்டும் ஒரு வீடியோ வெளியாகி சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்கி உள்ளது. அதாவது அந்த வீடியோவில், ரட்சித்தா கையில் குடையுடன் போலியாக பொழியும் மழைக்குள் நுழைகிறார். அப்போது வேகமாக தன் காலை எடுத்து வைத்த நொடியிலே அவர் கீழே வழுக்கி விழுகிறார். இருப்பினும் ஷூட்டிங் நிறுத்தப்படாமல் அவர் கீழே விழுந்தது முதல் தட்டுத்தடுமாறி எழுவது வரை அனைத்துமே தொடர்ந்து படமாக்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

அதன் பிறகும் ரட்சிதா வீட்டின் திண்ணையில் அமர்ந்து காலில் அடி ஏதும் பட்டுள்ளதா? என்று பார்ப்பதையும் அந்த வீடியோவில் காட்டியுள்ளார்கள். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர் சீரியல் ஷூட்டுக்காக விழுந்தாரா? இல்லை உண்மையாகவே விழுந்தாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனாலும் ஒரு பக்கம் ரசிகர்கள் அவர் மழையில் வழுக்கி விழும் போது வேண்டுமென்றே தான் கீழே விழுகிறார் என்பது “பச்சையாக” தெரிகிறது அப்படி இருக்கும்போது ஏன் அவர் ஷூட்டிங் முடிந்த பிறகும் தன் காலை சரிபார்த்தார் என்பது தான் குழப்பமாக உள்ளது என்ற கேள்வியையும் எழுப்பி வருகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!