உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்காத நடிகர் ரஜினிகாந்த் – என்ன காரணம் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

0
உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்காத நடிகர் ரஜினிகாந்த் - என்ன காரணம் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்காத நடிகர் ரஜினிகாந்த் - என்ன காரணம் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்காத நடிகர் ரஜினிகாந்த் – என்ன காரணம் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து சூப்பர் ஸ்டாராக மக்கள் மனதில் வாழ்ந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் நடந்து கொண்டிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க போவதில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த்:

சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து இந்த காலத்திற்கேற்றார் போல படங்களில் நடித்தும் தற்போது வரை ட்ரெண்டில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டாராக மக்கள் மனதில் இருக்கிறார். அவருக்கு நிகர் அவரே என சொல்லும் அளவிற்கு அவர் பிரபலமாக இருக்கிறார். இந்நிலையில் அவர் நடித்து பொங்கல் அன்று வெளியான அண்ணாத்தே படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றது. அந்த படம் வெளியீட்டிற்கு பின் அவருக்கு சில உடல்நல கோளாறு ஏற்பட்டது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா காதலர் தினம் அன்று செய்த காரியம்? உற்சாகத்தில் ரசிகர்கள்!

அதனால் அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அதன் பின் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல அவர் அதில் இருந்து மீண்டு வந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா தனது காதல் கணவர் தனுஷை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறார். அதை கேட்டு ரஜினிகாந்த் பெரும் மன உளைச்சலில் இருந்தார். அதனால் அவருக்கு மீண்டும் உடல்நிலை சரி இல்லாமல் இருக்கிறது.

பிறந்தநாள் விழாவில் கண்ணம்மா சொல்லப்போகும் உண்மை என்ன? பாரதி வருவாரா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

இன்று தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. அதில் நடிகர் விஜய் உட்பட பிரபல நடிகர்கள் காலையிலேயே தங்களது ஜனநாயக கடமையை செய்தனர். எப்போதும் தேர்தல் என்றாலே அதில் ரஜினி முதலாவது ஆளாக ஜனநாயக கடமையை செய்ய வருவார். ஆனால் தற்போது அவருக்கு உடல்நிலை சரி இல்லாமல் இருப்பதால் அவரால் வாக்களிக்க வர முடியவில்லை. மேலும் அவர் அங்கே வந்தால் கூட்ட நெரிசலில் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் அவர் வாக்களிக்க வரவில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!