Post Office இல் பணிக்கு சேர திட்டமிடுவோர் கவனத்திற்கு – உடனே விண்ணப்பியுங்கள்!

0
Post Office இல் பணிக்கு சேர திட்டமிடுவோர் கவனத்திற்கு - உடனே விண்ணப்பியுங்கள்!
Post Office இல் பணிக்கு சேர திட்டமிடுவோர் கவனத்திற்கு - உடனே விண்ணப்பியுங்கள்!
Post Office இல் பணிக்கு சேர திட்டமிடுவோர் கவனத்திற்கு – உடனே விண்ணப்பியுங்கள்!

இந்தியா போஸ்ட் அலுவலகங்களில் காலியாக உள்ள சுமார் 38,926 காலியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. GDS-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான indiapostgdsonline.gov.in மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

தபால்துறை

கொரோனா காலகட்டத்தில் எந்த ஒரு மாநிலத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் போட்டித் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இதனால் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு தகுந்த வேலை இன்றி திணறி வந்தனர். இந்நிலையில் இந்த வருடம் கொரோனா குறைந்த நிலையில் போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தனியார் துறைகளிலும் வேலைவாய்ப்பு முகாம்களையும் நடத்தி வருகின்றனர். அதே போல் தபால் துறையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பை வெளியிட்டுள்ளது.

மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் உத்தரவு!

இந்த பதவிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் 10 ஆம் வகுப்பு இடைநிலைப் பள்ளி தேர்வில் தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். GDS இன் அனைத்து பிரிவினருக்கும் அத்தியாவசிய கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், விண்ணப்பதாரர் அவர் பணிபுரியும் இடங்களுக்கு ஏற்றார் போல உள்ளூர் மொழியை நன்றாக தெரிந்திருக்க வேண்டும். இதில் விருப்பம் உள்ளவர்கள் 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி, குறிப்பிட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

Exams Daily Mobile App Download

இந்த பதவிக்கு வேறு எந்த தேர்வும் நடத்தப்படாது. கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 12,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும். உதவி போஸ்ட் மாஸ்டர் மற்றும் டக் சேவக் பதவிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 10,000 வரை சம்பளம் வழங்கப்படும். போஸ்ட் ஆபீஸ் பதவிக்கு விண்ணப்பிக்க indiapostgdsonline.gov.in. என்ற இணையதளத்திற்கு சென்று முகப்பு பக்கத்திற்கு சென்று Register பொத்தானை CLICK செய்யவும். பின்னர் தங்களுடைய தகவலை பூர்த்தி செய்து submit கொடுக்கவும். ஸ்கேன் செய்யப்பட்ட அனைத்து நகல்களையும் பதிவேற்றி படிவத்தை சமர்ப்பிக்கவும். பின்னர் உங்களுடைய விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!