ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – மிஸ் பண்ணாம படிங்க!

0
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு - மிஸ் பண்ணாம படிங்க!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு - மிஸ் பண்ணாம படிங்க!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – மிஸ் பண்ணாம படிங்க!

இந்தியாவில் ரயில் பயணிகள் கூடுதலாக லக்கேஜ்களை எடுத்து சென்றால் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. நீங்கள் கொண்டு செல்லும் லக்கேஜ்களுக்கு முன் கூட்டியே முன்பதிவு செய்து கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

லக்கேஜ்:

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ரத்து செய்யப்பட்ட ரயில்களும் பயணிகள் வசதிக்காக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா முழுமையாக குறையாமல் உள்ளதால் கூட்டம் கூடுவதை தவிர்க்க முன்பதிவு அடிப்படையில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் ரயில்வேயின் ஐசிஆர்டி இணையதளம் வாயிலாக எளிதாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணம் செய்து வருகின்றனர். இதில் பயணிகளுக்கு சில சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – ஷாக் அறிவிப்பு!

இந்த நிலையில் புதிய அறிவிப்பு ஒன்றை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் எவ்வளவு எடையுள்ள லக்கேஜ்களை கொண்டு செல்ல வேண்டும் என்ற விதி ஏற்கனவே அமலில் உள்ளது. தற்போது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் லக்கேஜ்களை கொண்டு சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நிர்ணயிக்கப்பட்ட அளவின் படி 40 கிலோ முதல் 70 கிலோ வரை எடையுள்ள லக்கேஜ்களை எடுத்துச் செல்லலாம். இதனை மீறும் போது அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

இந்த அறிவிப்பை அடுத்து ரயில்வே பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நேரத்தில் லக்கேஜ் அபராதம் குறித்து பரவிய தகவல் தவறானது என்று ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ஏற்கனவே லக்கேஜ் கொள்கை 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளதால் அதுவே தொடரப்படும். பயணிகள் தாங்கள் பயணம் செய்யும் வகுப்புகளை பொருத்து 40 கிலோ முதல் 70 கிலோ வரை லக்கேஜ்களை எடுத்து செல்லலாம். அதாவது ஸ்லீப்பர் வகுப்பில் பயணம் செய்யும் பயணிகள் தங்களுடன் 40 கிலோ வரை லக்கேஜ்களை எடுத்து செல்லலாம். அதன்படி AC வகுப்பில் பயணம் செய்யும் பயணிகள் தங்களுடன் 50 கிலோ வரை லக்கேஜ் எடுத்துச் செல்லலாம். முதல் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் தங்களுடன் 70 கிலோ வரை லக்கேஜ் எடுத்துச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!