தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு குறித்த முக்கிய அறிவிப்பு – வழக்குகள் ரத்து!

0
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு குறித்த முக்கிய அறிவிப்பு - வழக்குகள் ரத்து!
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு குறித்த முக்கிய அறிவிப்பு - வழக்குகள் ரத்து!
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு குறித்த முக்கிய அறிவிப்பு – வழக்குகள் ரத்து!

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று மக்களை ஆட்டிப் படைத்தது வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்ட 5503 வழக்குகள் குறித்து முக்கிய அறிவிப்பு ஓன்று வெளியாகி இருக்கிறது.

ஊரடங்கு வழக்குகள் ரத்து:

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருந்தது. மேலும் கொரோனா 2வது அலை தாக்கத்தின் போது நடவடிக்கைகள் கடமையாக்கப்பட்டது. அந்த வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களை கண்டறிந்து கடைகள், வணிக வளாகங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு தலா ரூ.200, கடை உரிமையாளர்களுக்கு ரூ.500 முதல் அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், வதந்தி பரப்பியவர்கள், உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பியவர்கள் மீதும் சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 2வது முறை அதிகமாகும் வட்டி விகிதம்!

இவ்வழக்குகளில் பெரிய குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடான வழிகளில் இ-பாஸ் பெற்று பயன்படுத்திய வழக்குகள் மற்றும் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் போன்றவற்றை தவிர மற்ற அனைத்து வழக்குகளும் கைவிடப்படுவதாக அரசின் உத்தரவின்படி காவல்துறை தலைவர் நடவடிக்கை எடுத்தனர். இந்த முடிவு பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெரிய குற்ற வழக்குகள் தவிர கைவிட்டு வழக்கினை திரும்ப பெறக்கூடிய வழக்குகள் என 8 லட்சத்து 98 ஆயிரத்து 948 வழக்குகள் திரும்ப பெற தகுதி உடையனவாக கண்டறியப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 5503 வழக்குகளில் 14 ஆயிரத்து 487 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளில் 2 ஆயிரத்து 989 வழக்குகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளன. மேலும் 2 ஆயிரத்து 502 வழக்குகள் புலன் விசாரணையிலும் மீதி ஆரம்ப கட்ட நிலையிலும் உள்ளன. இந்த வழக்குகள் விதிகளின் கீழ் ரத்து செய்ய தகுதியானவையாக அறியப்பட்டுள்ளது. எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா காலத்தில் போடப்பட்ட வழக்குகளில், அரசின் விதிகளின் கீழ் உள்ள வழக்குகளை ரத்து செய்ய மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!