முன்னணி சீரியலில் இருந்து விலகும் முக்கிய கதாநாயகிகள் – ரசிகர்கள் அதிர்ச்சி! வைரலாகும் புகைப்படம்!

0
முன்னணி சீரியலில் இருந்து விலகும் முக்கிய கதாநாயகிகள் - ரசிகர்கள் அதிர்ச்சி! வைரலாகும் புகைப்படம்!
முன்னணி சீரியலில் இருந்து விலகும் முக்கிய கதாநாயகிகள் - ரசிகர்கள் அதிர்ச்சி! வைரலாகும் புகைப்படம்!
முன்னணி சீரியலில் இருந்து விலகும் முக்கிய கதாநாயகிகள் – ரசிகர்கள் அதிர்ச்சி! வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சின்னத்திரையில் டாப் சீரியல் கதாநாயகியாக வலம் வரும் கேப்ரியல்லா மற்றும் வினுஷா தேவி இணைந்து புதிதாக படம் ஒன்று நடிக்க இருப்பதாக புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதனால் அவர்கள் சீரியலில் இருந்து விலகிவிடுவார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

ரசிகர்கள் கேள்வி:

சினிமா பார்க்கும் ரசிகர்கள் பலர் இருந்தாலும் சின்னத்திரையில் காலை முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. பல சீரியல்கள் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. பெண்கள் தங்களது வாழ்க்கையில் படும் கஷ்டங்களை பற்றி சீரியல்கள் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. முன்னணி சீரியல்களில் கதாநாயகிகள் படும் கஸ்டங்களை பார்த்தால் ஏதோ தங்கள் வீட்டு பெண்கள் போல நினைத்து கொந்தளிக்கின்றனர்.

தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

அந்த வகையில் சன் டிவியில் சுந்தரி சீரியலில் சுந்தரி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் கேப்ரியல்லா. கருப்பாக இருப்பதால் அவருடைய கணவர் அவரை விட்டு வேறு அழகான பெண்ணுடன் வாழ்ந்து வர எல்லா உண்மையும் தெரிந்தும் கூட அவர் தன்னுடைய இலட்சியத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அதனால் சுந்தரி கதாபாத்திரத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். கிட்டத்தட்ட அதே போல கதையுடன் தொடங்கப்பட்ட சீரியல் தான் விஜய் டிவி பாரதி கண்ணம்மா.

கருப்பு நிறத்தை மையமாக கொண்டு இந்த சீரியல் கதை தொடங்கப்பட்டது. ஆனால் இப்போது வேறு தரப்பில் கதை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். இந்நிலையில் கேப்ரியல்லா மற்றும் வினுஷா தேவி இணைந்து புதிதாக படம் ஒன்றில் நடிக்க இருக்கின்றனர். அது குறித்த புகைப்படத்தை கேப்ரியல்லா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றனர். அதனால் இந்த கதாநாயகிகள் சீரியலில் தொடர்ந்து நடிப்பார்களா என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here