அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க திட்டமிடுவோருக்கு ஜாக்பாட் – இந்தியன் வங்கி சூப்பர் அறிவிப்பு!

0
]அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க திட்டமிடுவோருக்கு ஜாக்பாட் - இந்தியன் வங்கி சூப்பர் அறிவிப்பு!
]அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க திட்டமிடுவோருக்கு ஜாக்பாட் - இந்தியன் வங்கி சூப்பர் அறிவிப்பு!
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க திட்டமிடுவோருக்கு ஜாக்பாட் – இந்தியன் வங்கி சூப்பர் அறிவிப்பு!

இந்தியாவில் அனைவரும் தங்கத்தின் மீது அதிக முதலீடுகளை செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அத்துடன் தங்கத்தை பெரும்பாலானோர் வாங்கி சேமித்து வருகின்றனர். தற்போது இந்த ஆண்டுக்கான அட்சய திருதியை முன்னிட்டு அனைவரும் தங்க நகைகளை வாங்க விரும்புவார்கள். இவர்களுக்கு உதவும் வகையில் இந்தியன் பேங்க் ஒரு சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சிறப்பு திட்டம்:

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் மிகவும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்தனர். அதனால் தங்கள் பணத்தை பாதுகாப்பான முதலீட்டில் சேமிக்க முடிவு செய்தனர். அதன் காரணமாக தங்க நகைகளை அதிகளவு வாங்கி சேமிக்க தொடங்கினர். ஏனெனில் தங்க நகைகளை வங்கிகளில் அடமானம் வைத்து குறைவான வட்டி விகிதத்தில் கடன் பெற முடியும் என்பதால் ஏராளமானோர் தங்க நகைகளை வாங்க ஆர்வம் கொள்கின்றனர். மேலும் இந்த ஆண்டில் அட்சய திருதியை முன்னிட்டு தங்க நகைகளை வாங்க நினைப்பர்.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

இதில் சிலருக்கு பண பற்றாக்குறை இருக்கும். இந்த நெருக்கடி சமயத்தில் வங்கிகளில் குறைவான வட்டி விகிதத்தில் கடன் தொகை வழங்கப்படுகிறது. மேலும் தற்போது பல்வேறு வங்கிகளில் குறைவான வட்டி விகிதத்திற்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியன் பேங்க் ஒரு சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை ‘wave’ என்ற பெயரில் செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் முன்கூட்டிய ஒப்புதல் பெற்ற தனிநபருக்கு கடன் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடனுக்கு ஆண்டுக்கு 10% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

இந்த திட்டத்தில் பயன் அடைய நினைப்பவர்கள் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளராக இருக்க வேண்டும். மேலும் இத்திட்டத்தின் கீழ் இணைய வேண்டுமெனில் அவர்களது சம்பளம் அல்லது பென்ஷன் தொகை அவர்களின் சம்பளக் கணக்கின் கீழ் பெற வேண்டும் என்பது கட்டாயமாகும். இதில் இணைய நேரடியாக வங்கிக்கு செல்ல வேண்டும் என்று அவசியமில்லை. இதனை வீட்டில் இருந்தபடியே மொபைல் ஆப் அல்லது வெப்சைட் மூலமாகவே செய்ய முடியும். அதனால் தங்கம் வாங்க நினைப்பவர்கள் இத்திட்டத்தில் இணைந்து சுலபமாக வாங்கி கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here