TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

0
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும் என்பதால் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சிகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேர்வர்கள் கவனத்திற்கு:

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தகுதியான ஆட்கள் நியமிக்கப்படுகிறார்கள். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து குரூப் 4 & VAO தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வு மூலமாக 7382 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு – எந்த நாளில் சென்றால் விசேஷம், ஏன் மொட்டை போடுகிறோம்? முழு விவரம்!

இத்தேர்வு மூலமாக இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலா், நில அளவையாளர் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட பணியிடங்களில் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அத்துடன் குரூப் 4 தேர்வு ஒரே ஒரு நிலை கொண்ட தேர்வு என்பதாலும் இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதாலும் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி வருகின்றனர். மேலும் இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் சுமார் 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

இத்தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் அறிவித்துள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 24ம் தேதி அன்று காலை 10.30 மணி அளவில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன் இதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் தங்களின் ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் உள்ளிட்டவற்றுடன் வருகை புரிய வேண்டும். இது தொடர்பான தகவல்களை பெற 044 24615160 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!