தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்று பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

0
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - இன்று பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - இன்று பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்று பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணை இன்று மதியம் 1 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் அவர்களால் வெளியிடப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு அட்டவணை:

தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் முழுமையாக நடத்தப்படாமல் இருந்தது. இதனால் ஆன்லைன் வழி வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டது. இடையில் கொரோனா பாதிப்புகள் குறைந்த சமயத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கொரோனா நோய் தொற்று பாதிப்புகள் அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வந்த காரணத்தால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது. தொடர்ந்து 2020ம் ஆண்டில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் பாதி நடத்தப்பட்டு இருந்தது, மீத பாடங்களுக்கு கலந்து, அரையாண்டு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.

இரவு ஊரடங்கு மீண்டும் அமல்? இனிமேல் மாஸ்க் இல்லாமல் பயணம் செய்யலாம்! அரசு அறிவிப்பு!

இதேபோல், 2020 – 2021ம் கல்வியாண்டிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டு அதிக பாதிப்புகள் காரணமாக பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் அரசு அகமதிப்பீடு முறையை நிர்ணயித்து அதன் மூலம் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று அரசு தீர்மானமாக இருந்தது. இதனால் 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி தீவிரமாக செலுத்தப்பட்டது.

2022ம் ஆண்டில் 11 நாட்களுக்கு அரசு பொது விடுமுறைகள் அறிவிப்பு – முழு பட்டியல் வெளியீடு!

இந்நிலையில், கடந்த வாரத்தில் பொதுத்தேர்வு பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கால அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று மதியம் 1 மணிக்கு வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த நிகழ்ச்சி நடக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!