ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – எந்த பிரச்சனை என்றாலும் உடனே புகார் கொடுக்கலாம்!

0
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு - எந்த பிரச்சனை என்றாலும் உடனே புகார் கொடுக்கலாம்!
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு - எந்த பிரச்சனை என்றாலும் உடனே புகார் கொடுக்கலாம்!
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – எந்த பிரச்சனை என்றாலும் உடனே புகார் கொடுக்கலாம்!

ரயில் பயணிகளுக்கு ரயிலில் ஏதேனும் குறைகள், தொந்தரவு இருப்பின் அதை தெரிவிக்கவே பிரத்யேகமாக ஒரு ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பிரச்சனைகளுக்கெல்லாம் புகார் அளிக்கலாம் என்பது குறித்தான முழு தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணம்:

பேருந்து போக்குவரத்தை காட்டிலும் ரயிலில் செலவு கம்மி என்பதால் பலரும் ரயிலில் தான் பயணம் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர். மேலும், ரயில் பயணம் தான் பாதுகாப்பான பயணம் எனவும் பயணிகள் எண்ணுகின்றனர். ரயிலில் ஏதேனும் குறைகள் இருப்பின் அதை யாரிடம் தெரிவித்து சரி செய்துகொள்வது என்பது பலரின் கேள்வியாகவே இருக்கும். உதாரணமாக ரயிலில் பயணம் செய்துகொண்டிருக்கும் நபருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் எப்படி உடனடியாக மருத்துவ உதவிக்கு அழைப்பது என்பது பலருக்கும் தெரிவதில்லை.

தனியார் நிறுவனத்தில் வேலை தேடிக்கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு..!

ரயில் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே Rail MADAD என்கிற மொபைல் ஆப் பயன்பாட்டில் இருக்கிறது. கூகுள் பிளே ஸ்டோர் தளத்தில் இருந்தே இந்த ஆப்பை டவுன்லோடு செய்து கொள்ளலாம். ரயிலில் யாருக்காவது மருத்துவ உதவி தேவைப்படும் பட்சத்தில் இந்த ஆப் மூலமாகவே மருத்துவ உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும். இதுமட்டுமல்லாமல் ரயிலில் திருட்டு, கடத்தல் உள்ளிட்ட சில சம்பவங்கள் நடைபெற்றாலும் கூட இந்த ஆப் மூலமாகவே புகார் அளிக்க முடியும்.

Exams Daily Mobile App Download

ரயில் பயணிகளிடம் சக பயணி தொந்தரவு செய்தாலும் கூட இந்த ஆப் மூலம் புகார் அளிக்கலாம். மேலும், ஏதேனும் விலை உயர்ந்த பொருள் தொலைந்து போனாலோ அல்லது கழிப்பறை சுத்தமாக இல்லை, ரயிலில் தண்ணீர் வரவில்லை போன்ற புகார்களையும் இந்த ஆப் மூலமாகவே புகார் கொடுக்கலாம். ரயில் பயணி புகார் அளித்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு ரயில்வே அதிகாரிகள் அல்லது ரயில்வே போலீசார் தொடர்பு கொண்டு உடனடியாக அந்த பிரச்சனை தீர்த்து வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளை தீர்க்கவே பிரத்தியேகமாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here