இந்திய ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ் – அமைச்சகத்தின் முக்கிய அறிவிப்பு!

0
இந்திய ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ் - அமைச்சகத்தின் முக்கிய அறிவிப்பு!
இந்திய ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ் - அமைச்சகத்தின் முக்கிய அறிவிப்பு!
இந்திய ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ் – அமைச்சகத்தின் முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் ரயில் பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணித்து வருவது வழக்கம் இந்த நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஜிஎஸ்டி உயர்வு

இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். கடந்த ஊரடங்கு காலத்தில் தொற்று அச்சம் காரணமாக ரயில் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஏராளமான பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். அதனால் பயணிகளுன் நலனை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட ரயில்கள் பயணிகளின் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே இயக்கப்பட்டது. எப்போதும் ரயில் பயணிகள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணிப்பது வழக்கம். இவ்வாறு முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளை ஏதேனும் ஒரு சில காரணங்களால் ரத்து செய்யப்படுவது வழக்கம்.

NEET இளநிலை தேர்வுக்கான விடைக்குறிப்பு – தேர்வு முகமை வெளியீடு!

தற்போது IRCTC அளிக்கும் சலுகையில் ஒன்றாக முன்பதிவு செய்வோர் திடீரென டிக்கெட்டுகளை ரத்து செய்தால் டிக்கெட் தொகையை திரும்ப பெறும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு 5% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் ரயில் டிக்கெட்டை ரத்து செய்வதன் மூலம், சேவை வழங்குநருக்கு ஒரு சிறிய தொகை இழப்பீடு அளிக்கப்படும். மேலும் ரத்து கட்டணமாக வசூலிக்கப்படும். அத்துடன் ரத்து கட்டணம் என்பது ஒப்பந்தத்தை மீறுவதற்கு பதிலாக செலுத்தப்படுவதால், இனி அதற்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.

இந்த ரயில் டிக்கெட் ரத்து செய்வதற்கான ஜிஎஸ்டி, ஏசி வகுப்புகளுக்கு மட்டும் பொருந்தும் என்றும் இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கு ஜிஎஸ்டி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் ஏசி முதல் வகுப்பு அல்லது ஏசி எக்ஸ்கியூட்டிவ் வகுப்பு டிக்கெட்டை ரத்து செய்யும் போது அதற்கு சேவை கட்டணமாக ரூ.240 பிடித்தம் செய்யப்பட்டு வந்தது தற்போது விதிக்கப்பட்ட GST வரியால் ரூ.240 க்கு 5% ஜிஎஸ்டி செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதே போல 12 மணி முதல் 4 மணி நேரம் வரை உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்ய, முன்பதிவு தொகையில் 50 சதவீதம் வசூலிக்கப்படுகிறது இதிலும் 5% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!