TNPSC Group 4 VAO தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

0
TNPSC Group 4 VAO தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 - உடனே பாருங்க!
TNPSC Group 4 VAO தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 - உடனே பாருங்க!
TNPSC Group 4 VAO தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

ஜூலை 24ஆம் தேதி நடைபெற இருக்கும் குரூப்-4 தேர்வுக்கு எந்தெந்த பாடத் திட்டங்கள் இருக்கின்றன என்பது குறித்தும், அந்த பாடத்திட்டங்களை எளிமையாக எந்த முறையில் படிக்கலாம் என்பது குறித்தான அனைத்து விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குரூப்-4 தேர்வு:

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி நடைபெற இருக்கிறது. குரூப்-4 தேர்வுக்கு என்னென்ன பாடத்திட்டங்கள் இருக்கிறது என்பது குறித்தும் இந்த பாடத்திட்டங்களை எவ்வாறு படிப்பது என்பது குறித்தும் கீழே விளக்கமாக காணலாம். குரூப்-4 தேர்வுக்கு மொத்தமாக 7382 காலிப்பணியிடங்கள் உள்ளன. மேலும், இந்த 7382 காலிப்பணியிடங்களுக்கு இருபத்தி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர். எழுத்துத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களை கொண்டே இந்த பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படுகின்றன. குரூப்-2 தேர்வு மொத்தமாக இரண்டு பகுதிகளாக நடைபெறும்.

வேகமெடுக்கும் குரங்கு அம்மை நோய் பரவல் – சுகாதாரத்துறை அதிரடி தடுப்பு நடவடிக்கை!

முதல் பகுதியான தமிழ்மொழி தகுதித் தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்படும். அனைத்து கேள்விகளுக்குமே தேர்வாளர்கள் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். குறைந்தபட்சமாக 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே விடைத்தாள்கள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும். இரண்டாம் பகுதியான பொது அறிவு பகுதிகளிலிருந்தும் 100 வினாக்கள் கேட்கப்படும். அதாவது புதிதாக யூனிட் 1 தமிழ்நாடு மரபு பண்பாடு இலக்கியம் மற்றும் யூனியன் தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம் ஆகிய பாடங்களும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 என்கிற மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். தமிழ்மொழி பாடப்பிரிவில் இருந்து தமிழ், இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

இரண்டாம் பகுதியான பொது அறிவுத் தேர்வில் 75 பொது அறிவு வினாக்கள், 25 திறனறிவு வினாக்கள்(Aptitude Test) கேட்கப்படும். அதாவது பொது அறிவு பகுதியில் அறிவியல் நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம் போன்ற பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். தமிழ்மொழி தகுதித் தேர்விற்கு 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை உள்ள செய்யுள், உரைநடை, இலக்கணம் ஆகிய அனைத்து பிரிவுகளையும் தொடர்ச்சியாக படிக்க வேண்டும். செய்யுள் பகுதியைப் படிக்கும் போது அதற்குரிய பாடல்களை ஒரு தடவைக்கு மேல் நன்றாக வாசித்து பார்த்து அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டால் அதன் விடையை எளிமையாக கண்டறிய முடியும்.

Exams Daily Mobile App Download

கணிதத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு தலைப்பின் கீழ் வரும் வினாக்களை முறையாக பயிற்சி செய்தாலே தேர்வில் எளிமையாக வினாக்களுக்கான விடையை கண்டறிய முடியும். புவியியல் பாடத்தினை படிக்கும்போது இந்திய வரைபடத்துடன் இடங்களை பொருந்தி மனதில் பதித்துக் கொண்டால் மட்டுமே எளிமையாக வினாக்களை புரிந்துகொண்டு விடையளிக்க முடியும். ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் பாடப் புத்தகங்களை நன்றாக படித்து விட்டாலே குரூப்-4 தேர்வில் எளிமையாக வெற்றி பெற முடியும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!