TNPSC தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
கூட்டுறவு தணிக்கை துறையில் உள்ள உதவி இயக்குனர் பணிக்கான எழுத்து தேர்வு வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தகுதி தேர்விற்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பத்தாரர்கள் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை தகுதித் தேர்வின் மூலமாக தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுத்து அந்த காலி பணியிடங்களை நிரப்பி வருகின்றன. அவ்வப்போது TNPSC காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கையை வெளியிட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக தகுதி தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை.
நாளை (ஏப்ரல் 28) மாவட்டங்களுக்கான பொது விடுமுறை அறிவிப்பு – பிரதமர் வருகை எதிரொலி!
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள காரணத்தினால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2, குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டது. குரூப் 2 தேர்வு மே 21 ஆம் தேதியும், குரூப் 4 தகுதி தேர்வு ஜூன் 24 ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தகுதி தேர்வு நடக்க இருக்கும் காரணத்தினால் பல லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதனையடுத்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கூட்டுறவு தணிக்கை துறையில் உள்ள உதவி இயக்குனர் பணியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.
Exams Daily Mobile App Download
கூட்டுறவு தணிக்கை துறையில் உள்ள உதவி இயக்குனர் பணிக்கு மொத்தமாக 8 காலியிடங்கள் உள்ளன. மேலும், கூட்டுறவு தணிக்கை துறையில் உதவி இயக்குனர் பணிக்கான எழுத்து தேர்வு ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. விண்ணப்பித்திருக்கும் விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதள முகவரியில் சென்று ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என TNPSC அறிவிக்கப்பட்டுள்ளது.