தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துறை முக்கிய அறிவிப்பு – உடனே படிங்க!

0
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துறை முக்கிய அறிவிப்பு - உடனே படிங்க!
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துறை முக்கிய அறிவிப்பு - உடனே படிங்க!
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துறை முக்கிய அறிவிப்பு – உடனே படிங்க!

நிலுவைத் தொகை செலுத்த வேண்டியவர்கள் நிலுவை தொகையை செலுத்தி விற்பனைப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளும்படி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்:

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தமிழ்நாடு அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. அதாவது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடிமக்களின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர். மேலும், இந்த திட்டத்தின் கீழ் குடி மக்களுக்கு வாரிய விதிமுறைகளின் படி, மாதத் தவணைத் திட்டம், மொத்தக் கொள்முதல் திட்டம் மற்றும் சுயநிதித் திட்டத்தின் வாயிலாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

TN TET ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – பாடத்திட்டங்கள் & முழு விபரம் இதோ!

ஒதுக்கீடு செய்யப்பட்ட அலகுகளுக்குரிய மொத்த தொகையையும் வாரியத்திற்கு ஒதுக்கீட்டுதாரர்கள் செலுத்திய பின்னர் தான் கிரயப் பத்திரம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில் வாரியத் திட்டங்களில் ஒதுக்கீடு பெற்ற சில ஒதுக்கீடுதாரர்கள் முழுத் தொகையைச் செலுத்திய பின்பும் கூட விற்பனைப் பத்திரம் பெற முன்வரவில்லை என மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் முழு தொகையை செலுத்திய ஒதுக்கீடுதாரர்கள் விற்பனைப் பத்திரம் பெற்றுக்கொள்ளவும் மற்றும் நிலுவைத் தொகை செலுத்த வேண்டியவர்கள் நிலுவைத் தொகையினை செலுத்தி விற்பனைப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தற்போது வாரியத்தின் அனைத்துக் பிரிவுகளில் உள்ள அலுவலகங்களில் விற்பனைப் பத்திரம் வழங்கும் மேளா மார்ச் 4 முதல் மார்ச் 8 வரை நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நிலுவைத் தொகை செலுத்த வேண்டியவர்கள் நிலுவை தொகையை செலுத்தி விற்பனைப் பத்திரத்தை பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here