திருப்பதி கோவில் செல்லுவோர் கவனத்திற்கு – முக்கிய தகவல்கள் இதோ!

0
திருப்பதி கோவில் செல்லுவோர் கவனத்திற்கு - முக்கிய தகவல்கள் இதோ!
திருப்பதி கோவில் செல்லுவோர் கவனத்திற்கு - முக்கிய தகவல்கள் இதோ!
திருப்பதி கோவில் செல்லுவோர் கவனத்திற்கு – முக்கிய தகவல்கள் இதோ!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27ம் தேதியிலிருந்து அக்டோபர் மாதம் 5ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் குறித்து விரிவாக இப்பதிவில் பார்ப்போம்.

பிரம்மோற்சவம்

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலானது 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு நாள்தோறும் 60 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரம் வரை பக்தர்கள் வருகை புரிவார்கள். அதிலும் குறிப்பாக பிரம்மோற்சவ தினவிழாவில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வருகை புரிவார்கள். இதையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27ம் தேதி அன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட உள்ளது. இவ்விழா வருகிற 27ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ரத்து? ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

இவ்விழாவானது ஆந்திர அரசிடன் பாரம்பரிய முறைப்படி மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்வார். மேலும் இந்த 9 நாட்களிலும் காலை, மாலை இருவேளைகளில் மலையப்ப சுவாமிகள் பெரியசேஷ வாகனம், சிம்மம், கல்பவிருட்சம், கருடன், யானை, சந்திரபிரபை, குதிரை உள்ளிட்ட 16 வகையான வாகனங்களில் மாட வீதிகளில் வலம் வருவார். இந்த வாகன சேவைகளுடன் திருத்தேர் மற்றும் தங்கதேர் திருவிழாவும் நடைபெற உள்ளது. அத்துடன் ஏழுமலையான் மோகினி உள்ளிட்ட அவதாரங்களில் அருள்பாலிப்பார். அத்துடன் இத்திருவிழா நாட்களில் கோயிலுக்குள் கொலு வைக்கப்படுவதும் வழக்கமாகும்.

இக்கொலுவில் வீற்றிருக்கும் உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமிக்கு அர்ச்சகர்கள் நைவேத்தியம் படைப்பார்கள். இதனை தொடர்ந்து பிரம்மோற்சவத்தின் இறுதி நாளன்று திருமலையில் உள்ள திருக்குளத்தில் தீர்த்தவாரி நடத்தப்படுகிறது. அந்த சமயத்தில் ஏழுமலையானின் கையில் இருக்கும் சுதர்சன சக்கரத்திற்கு திருமஞ்சனம் செய்யப்படும். அதன் பின்னர் திருக்குளத்தில் தீர்த்தவாரி நடத்தப்படும். அன்றைய தினம், பிரம்மோற்சவத்தில் பங்கேற்ற முப்பெரும் தெய்வங்கள், முனிவர்களிடம் இருந்து ஏழுமலையானை பிரியாவிடை பெறும் தேவோதோத்வசனம் என்ற வைபவமும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here