தமிழக ஆசிரியர்களுக்கான புதிய திட்டம் அறிமுகம் – அமைச்சர் தகவல்!

0
தமிழக ஆசிரியர்களுக்கான புதிய திட்டம் அறிமுகம் - அமைச்சர் தகவல்!
தமிழக ஆசிரியர்களுக்கான புதிய திட்டம் அறிமுகம் - அமைச்சர் தகவல்!
தமிழக ஆசிரியர்களுக்கான புதிய திட்டம் அறிமுகம் – அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, முக்கிய நடவடிக்கைகள் பலவும் அதிரடியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது ஆசிரியர்களின் நலன் கருதி புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய திட்டம்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு திமுக தலைமையிலான புதிய ஆட்சி அமைந்தது. அதற்கு முன்னதாக தேர்தல் வாக்குறுதியாக பலவற்றை கூறியது. அதேபோல், ஆட்சிக்கு வந்த உடன் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த முக்கிய திட்டங்களை செயல்படுத்த அரசு அதிரடியாக நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியது. அதில், முக்கியமாக பள்ளிக்கல்வித்துறை ஒன்றாகும். பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவியேற்றார்.

ஆதார் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மத்திய அரசின் முக்கிய எச்சரிக்கை!

அதுமுதல், பள்ளிக்கல்வி மாணவர்களின் மற்றும் ஆசிரியர்களின் நலன் குறித்து பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் இடைவெளியை பூர்த்தி செய்யும் வகையில், எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடி கல்வி போன்ற பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோல், 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டமும் விரைவில் அமலாக உள்ளது.

இந்நிலையில், ஆசிரியர்களின் நலன் கருதி, ‘ஆசிரியர்களின் மனசு’ என்ற திட்டம் தொடங்கப்படுவது குறித்து புதுக்கோட்டையில் நடந்த ‘ஆசிரியர்களுடன் அன்பில் நம்மில் ஒருவர்’ என்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மேலும், ஆசிரியர்கள் இந்த திட்டத்தில் தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்கலாம், அவை அனைத்தும் நிறைவேற்றப்படும், [email protected], [email protected] என்ற மெயில் ஐடியில் ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here