TCS நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 2025க்குள் Vision 25/25 திட்டம்!

0
TCS நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - 2025க்குள் Vision 25/25 திட்டம்!
TCS நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - 2025க்குள் Vision 25/25 திட்டம்!
TCS நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 2025க்குள் Vision 25/25 திட்டம்!

இந்தியாவின் முன்னணி தகவல் தொடர்பு நிறுவனமான TCS, வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் விஷன் 25/25 திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் WFH முறையை தொடர இருப்பது குறிப்பிடத்தக்கது.

WFH திட்டம்

கொரோனா நோய் தொற்று உலகளாவிய தொழில் நிறுவனங்களில் பல்வேறு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பல்வேறு நிறுவனங்களில் Work From Home என்ற புதிய வேலை முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்தியா முழுவதும் தற்போது கொரோனா 2 ஆம் அலை தாக்கம் குறைந்திருக்க கூடிய சூழலில், தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியர்கள் மீண்டுமாக அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு வருகின்றனர்.

திருப்பதி தரிசனத்திற்கு முன்பதிவு செய்வோர் கவனத்திற்கு – இணையதளம் முடக்கம்!

மறுபக்கத்தில் இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளில் இயங்கி வரும் பெரும்பாலான நிறுவனங்கள் அதன் செலவுகளை குறைக்கவும், வேலைத் திறனை அதிகரிக்கவும் புதிய ஹைப்ரிட் வொர்க் மாடல் குறித்து ஆலோசித்து வருகிறது. அதாவது கொரோனா நோய் தொற்று காலத்தில் WFH முறை மிகப்பெரிய வெற்றியை அடைந்தது மட்டுமல்லாமல், சில முன்னணி நிறுவனங்களும் அதீத வளர்ச்சியை கண்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

அதனால் ஹைப்ரிட் வகையிலான வேலை முறையை அறிமுகம் செய்ய இந்தியாவை சேர்ந்த முன்னணி IT நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது. இதில் TCS நிறுவனம் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த ஹைப்ரிட் வொர்க் மாடல் என்பது, குறிப்பிட்ட அளவு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருகை தர, மற்றவர்கள் வீடுகளில் இருந்து வேலை பார்க்கும் முறையாகும். இதனை நிரந்தரமாக செயல்படுத்த TCS ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. TCS நிறுவனத்தின் இந்த அறிவிப்பு அதன் ஊழியர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து ஊழியர்களும் அலுவலகத்திற்கு வர வேண்டும் என இந்நிறுவனம் அறிவித்தது. ஆனால், தற்சமயம் 2025 ஆம் ஆண்டுக்குள் தனது விஷன் 25/25 திட்டத்தை செயல்படுத்த TCS திட்டமிட்டுள்ளது. அதன் கீழ் TCSன் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 25% பேர் அலுவலகம் செல்வார்கள் எனவும், 25% பணி நேரத்தை உயர் அதிகாரிகள் அலுவலகத்தில் செலவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஒவ்வொரு பிராஜெட்டிலும் 25% பேர் மட்டுமே பணிபுரிய வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

இது தொடர்பாக இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் கூறுகையில், ‘விஷன் 25/25 திட்டம் குறித்து 2020 நிதியாண்டு அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்த வேலை முறைக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் விஷன் 25/25 திட்டத்தை 2025ஆம் ஆண்டுக்குள் முழுமையாக செயல்படுத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் குறிப்பிட்ட ஊழியர்களுக்கு நிரந்தர WFH கிடைக்க வாய்ப்பு உள்ளது’ என தெரிவித்துள்ளார். இதனுடன் இந்த வேலை முறையை விப்ரோ, HCL உள்ளிட்ட நிறுவனங்களும் செயல்படுத்த திட்டமிட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!