தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஞாயிற்றுக்கிழமை பொங்கல் தொகுப்பு?

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஞாயிற்றுக்கிழமை பொங்கல் தொகுப்பு?
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஞாயிற்றுக்கிழமை பொங்கல் தொகுப்பு?
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஞாயிற்றுக்கிழமை பொங்கல் தொகுப்பு?

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஞாயிற்று கிழமைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுமா என்பது குறித்த முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பொங்கல் தொகுப்பு?

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதாவது பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகியவற்றை மஞ்சள் பையில் வைத்து ஒரு முழு கரும்பு ஒன்றும் சேர்த்து 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கபட்டு வருகிறது.

தமிழகத்தில் முழு ஊரடங்கில் இறைச்சி கடைகள் உட்பட அனைத்தும் மூடல் – மாவட்ட ஆட்சியர் தகவல்!

இந்த பொங்கல் தொகுப்பு வழங்கும் போது கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக மக்கள் கூட்டம் கூடாத வகையில் டோக்கன் அடிப்படையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய டோக்கன் நேரடியாக அவரவர் வீட்டிலே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் ஓமைக்ரான் மற்றும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது வார நாட்களில் இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறாக ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 19 வரை வார இறுதி முழு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

மேலும் அன்றைய தினம் பொங்கல் தொகுப்பு வாங்க உள்ளவர்கள் மாற்றாக உள்ள நாட்களில் பொங்கல் தொகுப்பு பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் சில இடங்களில் பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படும் மஞ்சள் பை விடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. அதனால் தமிழக உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் பொங்கல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள 21 பொருட்களில் ஏதேனும் விடுபட்டால் 18005993540 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். பின்னர் குறிப்பிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!