தமிழகத்தில் உணவு எண்ணெய்யை சில்லறையாக விற்க தடை? உணவு பாதுகாப்பு அதிகாரி அதிரடி!
தமிழகத்தில் அவ்வப்போது பல்வேறு இடங்களில் எண்ணெய்யை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைத்திருந்து அதனை விலைக்கு விற்று வருகின்றனர். அதனால் இது தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
உணவு எண்ணெய்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் எண்ணெயை பல நாட்களாக வைத்திருந்து விற்பனை செய்கின்றனர். இதனை குறைந்த விலைக்கு வாங்கி அதிக லாபத்திற்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும் உணவகங்களிலும் ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயை திரும்ப திரும்ப பயன்படுத்துகின்றனர். இதனை உட்கொள்வதால் உடலுக்கு தீங்கு ஏற்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
வேலை நேரம் போக மற்ற நேரங்களில் வெளி நிறுவனங்களில் வேலை? Swiggy-யின் அதிரடி அறிவிப்பு!
இந்த ஆய்வின் முடிவில், எண்ணெயை தொட்டியில் சேகரித்து சில்லறைக்கு விற்பனை செய்வது ஆய்வில் கண்டறியப்பட்டது. அத்துடன் அந்த எண்ணெய் மிகவும் கட்டி கட்டியாக இருப்பது தெரிய வந்தது. அத்துடன் அனுமதிக்கப்பட்ட நாட்களை விட அதிக நாட்கள் வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட கடையில் இருந்து 4.3 டன் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவில், பாமாயில் எண்ணெய் உடன் மற்ற எண்ணெய்கள் கலந்து விற்பனை செய்வது அம்பலமானது.
மேலும் இது தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் கூறியிருப்பதாவது, உணவு எண்ணெயை இனிமேல் சில்லறையாக விற்பனை செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும் அதிகளவில் நிறமூட்டப்பட்ட உணவை உட்கொள்வதை தவிர்க்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். அத்துடன் சரியான முறையில் தயாரிக்கப்பட்ட ஷவர்மா நல்ல உணவாக ஏற்று கொள்ளப்படும் என்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால் இனி மேல் எண்ணெய் கலப்படம் செய்வது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்