தமிழக அரசு சட்ட கல்லூரிகளுக்கு முக்கிய உத்தரவு – நீதிமன்றத்தின் பரிந்துரை!

0
தமிழக அரசு சட்ட கல்லூரிகளுக்கு முக்கிய உத்தரவு - நீதிமன்றத்தின் பரிந்துரை!
தமிழக அரசு சட்ட கல்லூரிகளுக்கு முக்கிய உத்தரவு - நீதிமன்றத்தின் பரிந்துரை!
தமிழக அரசு சட்ட கல்லூரிகளுக்கு முக்கிய உத்தரவு – நீதிமன்றத்தின் பரிந்துரை!

இந்தியாவில் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் அவர்களின் திருவுருவ படத்தை அனைத்து சட்ட கல்லூரிகளிலும் வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தற்போது பரிந்துரை செய்துள்ளது.

அம்பேத்கர்:

இந்தியாவில் இன்று நாம் அனைவரும் பின்பற்ற கூடிய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்தவர் அண்ணல் அம்பேத்கர். இவர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அம்போவதே கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். தன் பள்ளி கல்வியின் போது மேல் சமூகத்தினரிடம் பேசவோ அவர்களின் அருகில் அமரவோ விதிக்கப்பட்ட தடையால் மனம் உடைந்தார். இதற்கு மத்தியிலும் தனது அறிவால் அரசியல், பொருளாதாரம், தத்துவம் மற்றும் சட்டம் போன்றவற்றில் முதுகலை பட்டம் பெற்றார். இவர் சாதிகள் அற்ற சமத்துவ நாட்டை உருவாக்க அரும்பாடுபட்டார். மேலும் தீண்டாமை என்ற கொடிய நோய் ஒழிய பாடுபட்ட முதல் இந்தியர் அம்பேத்கர்.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு அவசியம் – முக்கிய அறிவுறுத்தல்!

இவர் தாழ்த்தப்பட்ட மற்றும் அடித்தட்டு மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தார். இறுதியாக அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் இருந்து தனது படிப்பை முடித்து திரும்பிய இவர் தாழ்த்தப்பட்ட மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கினார். மேலும் இந்தியா விடுதலை அடைந்த பிறகு முதல் அரசியல் சாசனத்தை வடிவமைத்தார். மேலும் சட்ட அமைச்சராகவும் பதவியேற்றார். கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கடுமையாக உழைத்து இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கினார். இதில் 7600 திருத்தங்கள் முன்மொழியப்பட்டு அவற்றில் 2473 பரிசீலிக்கப்பட்டு 1950 ஆண்டு ஜனவரி 26ம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

இன்று வரை இந்தியா மிகப் பெரிய அரசியலமைப்பு சட்டம் கொண்ட நாடாக திகழ்ந்து வருகிறது. அனைத்து அரசு அலுவலகங்கள், கல்லூரிகளில் மறைந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திரு உருவப்படம் வைதித்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் அம்பேத்கரின் உருவப்படத்தை வைக்க வேண்டும் என்று சட்டக் கல்வி இயக்குநருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரிந்துரைத்துள்ளது இது குறித்து சுற்றறிக்கை அனுப்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!