தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கான அசத்தல் அறிவிப்பு – கல்வித்துறை வெளியீடு!

0
தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கான அசத்தல் அறிவிப்பு - கல்வித்துறை வெளியீடு!
தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கான அசத்தல் அறிவிப்பு - கல்வித்துறை வெளியீடு!
தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கான அசத்தல் அறிவிப்பு – கல்வித்துறை வெளியீடு!

தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த பல நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் காண்பிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

சிறார் திரைப்படங்கள்

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கிட பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மாணவர்கள் எதிர்காலத்தில் தொழில்முறை கலைஞர்களாக வருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில் கலை தொடர்பான திட்டத்தை செயற்படுத்தி வருகிறது. அந்த வகையில் திரையிடல் திட்டம் ஒன்றை ‘சிறார் திரைப்பட விழா’ என்ற பெயரில் பள்ளிக்கல்வித்துறை ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் வெளியிடுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு – 7,591 பேருக்கு தொற்று உறுதி!

மேலும் இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் மாதந்தோறும் திரையிடப்பட வேண்டும். இந்த திரைப்படங்களை அதற்கான பாட வேளையில் மட்டுமே காண்பிக்கப்பட வேண்டும். மேலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பின் குழுக்களாக பிரித்து காண்பிக்கப்பட வேண்டும். அத்துடன் திரைப்படம் காண்பிப்பதற்கு முன்பும், பின்னும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் கலந்துரையாட வேண்டும்.

இதையடுத்து திரைப்படக்காட்டி (Projector) / தொலைக்காட்சிப்பெட்டி /ஒலிபெருக்கி இல்லாத பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் இதனை வாடகைக்கு பெற்று தர வேண்டும். இந்த திரைப்படம் முடிவடைந்த பிறகு அனைத்து மாணவர்களின் படைப்புகளையும் ஆவணப்படுத்த வேண்டும். இதில் சிறப்பாக விளங்கும் மாணவர்களுக்கு மாவட்ட மற்றும் மாநில அளவில் வாய்ப்பு வழங்கப்படும். இதில் பங்கேற்கும் 15 சிறந்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களை வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!