தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – பூசாரி நலவாரிய நலதிட்ட உதவிகள்!

0
தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - பூசாரி நலவாரிய நலதிட்ட உதவிகள்!
தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - பூசாரி நலவாரிய நலதிட்ட உதவிகள்!
தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – பூசாரி நலவாரிய நலதிட்ட உதவிகள்!

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கிராமக் கோயில் பூசாரி நலவாரியத்தில் நலத்திட்ட உதவி வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன`

விண்ணப்பங்கள் வரவேற்பு:

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோயில்களில் பணியாற்றும் கிராமக் கோயில் பூசாரிகள் பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரியம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பு வாரியாக கிராமக் கோயில் பூசாரி நலவாரியத்தில் உறுப்பினராக இணைவதற்கு விண்ணப்ப படிவங்கள் துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அந்தந்த மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பங்களை சமர்ப்பித்து நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்! முழு விபரங்கள் இதோ!

இந்த வகையில் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு கிராமக் கோயில் உறுப்பினருக்கு உதவித்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியிட்டார்.

1. மூக்குக் கண்ணாடி வாங்குவதற்கு ரூ.500/-, உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி கற்பதற்காக ரூ.1000 முதல் ரூ.6000 வரை உதவி தொகை ஆகும்.

2. பூசாரியின் மகன் அல்லது மகளின் திருமணத்திற்கு ரூ.3000 முதல் ரூ.5000 வரை, பூசாரியின் மனைவி அல்லது மகளின் மகப்பேறு தொடர்பான உதவிகளுக்கு ரூ.6000, உறுப்பினர் மரணமடைந்தால் அவரது இறுதி சடங்கிற்கு ரூ.2000 ஆகும். உறுப்பினர் மரணமடைந்தால் அவரது வாரிசுதாரருக்கு ரூ.15000 ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – ஹாப்பி நியூஸ்! விரைவில் அறிவிப்பு!

3.மேலும், கொரோனா நோய் தொற்று காலத்தில் கிராமக்கோயில் பூசாரி நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.1000 கொரோனா நிவாரணநிதி வழங்கப்பட்டது.

இத்துறையில் 1034 உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 34661 உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. பணிபுரியும் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராமப்புற திருக்கோயிலாக இருக்க வேண்டும் மற்றும் உறுப்பினர் ஆவதற்கான தகுதிகள் 25 வயது முதல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும். திருக்கோயில் கட்டி 5 வருடங்கள் ஆகி இருக்க வேண்டும். திருக்கோயிலில் பூசாரியாக தொடர்ந்து 5 வருடங்கள் பணிபுரிந்திருக்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!