போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

0
போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் கோட்டம் கடந்த அக்டோபர் 1 முதல் சில விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. இந்த விதிமுறைகள் அடுத்த வருடம் 2022 செப்டம்பர் மாதம் 30 வரை நடைமுறையில் இருக்கும். இதனை அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இது குறித்து இப்பதிவில் காணலாம்.

போஸ்ட் ஆபீஸ் விதிமுறைகள்:

கொரோனா நோய் பரவல் காரணமாக மக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றனர். மேலும் சிலர் தங்களின் வேலைகளை இழந்து மிகவும் கஷ்டப்படுகின்றனர். இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக நல்ல வருமானம் மற்றும் கை நிறைய லாபம் தரக்கூடிய அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். மேலும் இது ஆபத்து இல்லாத முதலீடாகவும் இருக்கிறது. அத்துடன் வங்கி கணக்குகளை போல இதிலும் இணையதள வங்கி மற்றும் செக் புக் சேவைகளையும் வழங்குகிறது. கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் சில விதிமுறை மாற்றங்கள் அஞ்சலக சேமிப்பில் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த விதிமுறைகள் அடுத்த வருடம் 2022 செப்டம்பர் மாதம் 30 வரை நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

அவைகளாவன, போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கில் பேலன்ஸ் இல்லாததால் ஏடிஎம் அல்லது பிஓஎஸ் பரிவர்த்தனைகள் நிராகரிக்கப்பட்டால், வாடிக்கையாளர் அதற்காக ரூ.20 செலுத்த வேண்டும். மேலும் அஞ்சல் அலுவலகம் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்எம்எஸ் தகவல்களுக்கு ரூ.12 மற்றும் ஜிஎஸ்டியுடன் கூடிய தொகை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும். அத்துடன் ஏடிஎம் அல்லது டெபிட் கார்டுகளுக்கு வருடாந்திர பராமரிப்பு கட்டணம் ரூ.125 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். ஏடிஎம் கார்டை இழந்தால், மற்றொரு கார்டைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் ரூ.300 மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இதெல்லாம் அஞ்சலக சேமிப்பில் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்த விதிமுறைகள் ஆகும். போஸ்ட் ஆபீஸ் ஏடிஎம்களில் முதல் 5 இலவச நிதி பரிவர்த்தனைகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைக்கும் ரூ.10 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.

TNPSC குரூப் 1 தேர்வு முடிவுகள் 2021 – விரைவில் வெளியீடு! தேர்வர்கள் எதிர்பார்ப்பு!

மேலும் போஸ்ட் ஆபீஸில் டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் பாயின்ட் ஆஃப் சர்வீஸ் மூலம் பணம் எடுப்பதற்கான பரிவர்த்தனையில் 1% செலுத்த வேண்டும். அத்துடன் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அதிகபட்ச 5 ரூபாய் என்ற அளவில் கட்டணம் செலுத்த வேண்டும். அதே போன்று போஸ்ட் ஆபீஸ் ஏடிஎம்களில் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களுக்கு முதல் ஐந்து பரிவர்த்தனைகள் இலவசமாக வழங்கப்படும். பிறகு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் செய்யப்படும் பரிவர்த்தனைகளில் மெட்ரோ நகரங்களில் முதல் 3 பரிவர்த்தனைகள் இலவசமாக வழங்கப்படும். அதே போல் மெட்ரோ அல்லாத நகரங்களில் முதல் ஐந்து பரிவர்த்தனைகள் இலவசமாக வழங்கப்படும். அதை தாண்டினால் ரூ.8 மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் எனவும் விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!