PG TRB பணியிடத்திற்கான சான்றிதழ் சரிபாா்ப்பு தேதி அறிவிப்பு – ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியீடு!

0
PG TRB பணியிடத்திற்கான சான்றிதழ் சரிபாா்ப்பு தேதி அறிவிப்பு - ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியீடு!
PG TRB பணியிடத்திற்கான சான்றிதழ் சரிபாா்ப்பு தேதி அறிவிப்பு - ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியீடு!
PG TRB பணியிடத்திற்கான சான்றிதழ் சரிபாா்ப்பு தேதி அறிவிப்பு – ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியீடு!

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருகை புரிபவர்களுக்கு சில விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதல் 30ம் தேதி வரை முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், கம்ப்யூட்டர் பயிற்றுநர் பணிக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வு மூலமாக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 3,236 பணியிடங்களை நிரப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நடப்பு ஆண்டில் 2,955 காலிப்பணியிடங்களும், ஏற்கனவே நிரப்பப்படாமல் காலியாக உள்ள 251 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன வாரி ஒதுக்கீட்டின் அடிப்படையில் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை திறப்பு – ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

மேலும் இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடத்தில் தமிழ்‌, ஆங்கிலம்‌, கணிதம், இயற்பியல்‌, வேதியியல்‌, தாவரவியல்‌, விலங்கியல்‌, வணிகவியல், பொருளியல்‌, வரலாறு, புவியியல், அரசியல்‌ அறிவியல்‌, மனை அறிவியல்‌, உயிரி வேதியியல்‌, இந்திய கலாச்சாரம், உடற்கல்வி, கணினி அறிவியல் உள்ளிட்ட 17 பாடங்களுக்கு 1:2 என்ற விகிதாச்சாரத்தின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியல் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களுக்கு வருகிற செப்டம்பர் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை ஆசிரியா் தோ்வு வாரிய வளாகத்தில் சான்றிதழ் சரிபாா்ப்பு நேரடியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வருகை புரியும் தேர்வர்கள் கைப்பேசி, பைகள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வர தடை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வர்கள் தங்களின் அசல் கல்விச் சான்றிதழ்கள், அசல் ஆதார் அட்டை உள்ளிட்டவற்றில் சுய சான்றொப்பமிட்ட நகல், அழைப்புக்கடிதம் உள்ளிட்டவற்றை உடன் எடுத்து வர வேண்டும். அத்துடன் தேர்வர்கள் குறித்த தேதி மற்றும் நேரத்திற்குள் வளாகத்திற்குள் இருக்க வேண்டியது கட்டாயமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!